முதலீடுகளை ஈர்ப்பதில் புதிய உச்சம் தொடும் தமிழ்நாடு:
1. 112 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
2. ரூபாய் 1,14,811.91 கோடி முதலீடுகள்
3. 1 லட்சத்து 32 ஆயிரத்து 771 பேருக்கு வேலைவாய்ப்பு
4. 23 துறைகளில் புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள்
தொழில் வளர்ச்சி:
பல்வேறு துறைகளில் பெருகும் முதலீடுகள்
1.வாகன உற்பத்தி துறை – ரூபாய் 17,073 கோடி
2. மின்னணுவியல் துறை – ரூபாய் 16,832 கோடி
3. ஜவுளித்துறை – ரூபாய் 7 ஆயிரத்து 781 கோடி
உலக முதலீட்டாளர்கள் நம்பிக்கை:
உலக முதலீட்டாளர்களின் விருப்பத் தேர்வாக தமிழ்நாடு
1. 17 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
2. 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
3. உலகளாவிய திறன் மையங்களின் மூலம் 5 ஆயிரத்து 870 நபர்களுக்கு உயர் வேலைவாய்ப்பு
திட்டச் செயலாக்கம்:
ஒப்பந்தங்களில் இருந்து செயலாக்கத்திற்கு
1.112 திட்டங்களில் 83 திட்டங்கள் நிலம் உறுதி செய்யப்பட்ட அல்லது அதற்கு மேற்பட்ட நிலையை எட்டியுள்ளன.
2. 74.11 சதவீதம் ஒட்டுமொத்த செயலாக்க முன்னேற்றம்
3. 23 திட்டங்கள் அடிக்கல் நாட்டும் நிலையை எட்டியுள்ளன அல்லது அதைக் கடந்துள்ளன.
தொழில் முதலீட்டுக்கு உகந்த தமிழ்நாடு:
1. 21 வேலை நாட்களுக்குள் அனுமதி வழங்கும் புதிய நடைமுறை
2. தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைப்பு
3. 11 துறைகளில் 25-க்கும் மேற்பட்ட தொழில் எளிதாக்கச் சீர்திருத்தங்கள்
4. முதலீட்டுத் திட்டங்களை விரைவுபடுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள்
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளனர்.
தவெக ஆட்சியில் பல்வேறு வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தவெக ஆட்சி அமைந்த பிறகு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் விஜய்யும் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.