சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சையாக்கப்பட்டது ஏன் ?

312 0
சனாதன தர்மம் பற்றி பேச்சு தான் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் ரீதியான விவாதத்திற்குரிய முக்கிய விஷயமாக மாறி உள்ளது. இதனால் சனாதன தர்மம் என்றால் என்ன, அதற்கு என்ன அர்த்தம், சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றா, அது மதம் சார்ந்த விஷயமா என்பது தான் அனைவரின் மனதிலும் எழுந்துள்ள சந்தேகமும், குழப்பமுமாக உள்ளது.
சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சையாக்கப்பட்டது ஏன் ?சனாதன தர்மம் என்பது பற்றி வரலாற்று ஆய்வாளர்களும், ஆன்மீக ஆன்றோர்களும் பல விதமான விளக்கங்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் சனாதன தர்மம் என்றால் என்ன என்பது பற்றி முதலில் தெரிந்து கொண்டால் தான், அது எதற்காக, எந்த வகையில் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி உள்ளது என்பது பற்றி தெரிந்த கொள்ள முடியும்.

சனாதன தர்மம் என்றால் என்ன ?

சனாதன எதிர்ப்பு மாநாட்டில் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு சமாதன தர்மம் என்றால் என்பது பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

சனாதன தர்மம் என்பது சமஸ்கிருத சொல்லாகும். இந்த சொல்லிற்கு நிலையான தத்துவஞானம், நிலையான நம்பிக்கை, அசைக்க முடியாத நித்திய சட்டம், மரியாதைக்குரிய ஒழுங்கு முறை என பல விதமான பொருள்கள் சொல்லப்படுகிறது. பொதுவாக தர்மம் என்பது, சனாதன தர்மம், வர்னாசராம தர்மம் என இரண்டு வகையாக சொல்லப்படுகிறது. இவற்றில் சனாதன தர்மம் என்பது, அனைவருக்கும் பொதுவான கடமை மற்றும் ஒரு ஆன்மிக அடையாளமாகும். அதே சமயம், வர்னாசராம தர்மம் என்பது காலம், ஒருவரின் வாழ்க்கை சூழல் ஆகியவற்றை பொறுத்து வகுக்கப்படும் கடமையாகும். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல், சேவை செய்தல், தொன்மையானது, நிலையான நெறிமுறைகளைக் கொண்டது என்பதே சனாதன தர்மமாகும்.

​சனாதன தர்மம் எப்போது தோன்றியது?

சனாதனம் என்ற சொல் மகாபாரதத்தில் பல இடங்களிலும், திருக்குறளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆன்மிக ஆன்றோர்கள் கூறுகையில், சனாதன தர்மம் என்பது பழமையான பண்பாடு. பெற்றோர்களை எப்படி மதித்து நடத்த வேண்டும், இறைவனை எவ்வாறு மதிக்க வேண்டும், அனைவரிடமும் அன்புடன் இருக்க வேண்டும் என போதிக்கும் முறையாகும். சாதி, மதம் என்பதெல்லாம் பிற்காலத்தில் தோன்றியவை. ஆனால் இது வாழ்வியல் நெறிமுறைகளை சொல்வதாகும் என்கின்றனர். சனாதன தர்மம் என்பது சமன்யதர்மம், வர்னதர்மம், ஆஷ்ரமதர்மம், வர்னாாஷ்ரம தர்மம், குணதர்மம், அபத்தர்மம், ஸ்ரெளத தர்மம், ஸ்திரி தர்மம், வியாஸ்தி தர்மம், ராஷ்டிர தர்மம் என பத்து வகைப்படும். இது தனி மனிதன் முதல் ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பது வரை ஒவ்வொன்றும் வழிகாட்டுவதாகும்.

​மாற்றம் பெற்ற சனாதன தர்மம் :

சனாதன தர்மம் என்பது ஆன்மா மற்றும் மறுபிறவி ஆகியவற்றை நம்பும் நித்திய மதங்களை குறிப்பதாகும். சனாதனம் என்ற சொல் இந்து மதத்துடன் தொடர்புடையது என பொதுவாக சொல்லப்பட்டாலும், இது ஜெயினர்கள் மற்றும் பெளத்த மதத்தவர்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாக உள்ளது. 19 ம் நூற்றாண்டிற்கு பிறகே சனாதன தர்மம் என்பது மற்ற மதங்களில் இருந்து வேறுபட்டு, இந்து மதத்தை குறிக்க பயன்படுத்தப்பட்டது. இது இந்து மதத்திற்குள் ஒருமைப்பாட்டை தூண்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

​​உதயநிதி பேசியது என்ன ?

​சனாதன தர்மம் சர்ச்சையானது ஏன் ?

எந்த காலத்திற்கும் பொருந்தும் வகையில், அனைவரும் பொருந்தக் கூடிய வகையில், ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை இப்படி தான் வாழ வேண்டும் என கோட்பாடுகள் வகுக்கப்பட்ட முறையை ஒழிக்க வேண்டும் என பொருள் பட பேசிய தான் சர்ச்சைக்கு காரணமாக உள்ளது. பெரும்பாலானவர்களுக்கு சனாதன தர்மம் என்பதற்கு சரியான பொருள் தெரியாது. அது இந்த மதத்தை குறிக்கும் ஒரு சொல் என பலரும் கருதுகிறார்கள். இதுவே சனாதன தர்மம் என்பது மதம் சார்ந்த விஷயமாக மாற்றப்பட்டு, சர்ச்சையாக்கப்பட்டுள்ளதற்கு காரணமாகும்.

Related Post

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - February 23, 2023 0
டெல்லி: ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற…

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு – ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?

Posted by - May 28, 2025 0
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஞானசேகரன் குற்றவாளி…

பணிநேரம் முடியும்வரை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

Posted by - March 29, 2023 0
விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள்…

தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்.. அசைவப்பிரியர்களே உஷார்..

Posted by - April 17, 2023 0
மீன்பிடி தடை காலம் என்பதால் மீன்கள் விலை வரும் நாட்கள் உயர வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க,…

மின்வாரிய ஊழியர்களை தாக்கிய திமுகவினர் : அண்ணாமலை கண்டனம்!

Posted by - April 22, 2025 0
மின்வாரிய ஊழியர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *