vijay

CM Vijay | “கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் மன்னிக்க முடியாத குற்றம்” – முதல்வர் விஜய்

86 0

“கோவை சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

“கோவை சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில், “கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை – 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

Posted by - October 22, 2025 0
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களை மழைநீர் சூழ்ந்ததாலும் விவசாயிகள்…

‘இந்தி தெரியாது போடா’ என சொல்லிவிட்டு இப்ப ‘கேலோ இந்தியா’-வாம்… சூடு, சொரணை இல்லாத உதயநிதி – நடிகை விந்தியா விமர்சனம்

Posted by - January 29, 2024 0
திமுக இளைஞரணி மாநாடு பயனுள்ளதாக இல்லை என்றும், அது சர்க்கஸ் மாநாடு என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா கிண்டலடித்துள்ளார். பழனியில் முன்னாள்…

முருகன் மாநாட்டால் திமுக அதிர்ச்சி – அதிமுக வாய் திறக்காது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி

Posted by - June 23, 2025 0
பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாட்டினை, திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடு,…

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Posted by - December 5, 2025 0
தாயுமானவர் திட்டத்தில் டிசம்பர் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம்…

ஆயுர்வேதத்தின் படி தொப்புளில் இந்த எண்ணெய் வைப்பது உங்களுக்கு பல அற்புத நன்மைகளை கொடுக்குமாம்…!

Posted by - December 13, 2023 0
பழமையான இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம், நாபிகா மர்மா என்றும் அழைக்கப்படும் தொப்புளை பல உடல் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்ட ஒரு முக்கிய இடமாக கருதுகிறது. தொப்புளில் எண்ணெய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *