crime news

கோவை சிறுமி வழக்கில் ஷாக் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

50 0

சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளியான கார்த்தி என்பவருக்குக் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவையில் சடலமாக மீட்கபட்ட 10 வயது சிறுமி கொலை வழக்கில், விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைச் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 10 வயது மகள், கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர், அக்கம் பக்கத்திலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், அன்றிரவே சூலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
குளக்கரையில் சடலமாக மீட்பு

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசாருக்கு, நேற்று காலையில் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. சிறுமியின் வீட்டின் அருகே இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்ணம்பாளையம் குளக்கரையில் சிறுமி சடலமாகக் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.

உடனடியாக நிகழ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ (ESI) அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு

சிறுமியின் மாயம் மற்றும் கொலை குறித்துப் போலீசார் கண்ணம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்ற இளைஞரின் இருசக்கர வாகனத்தில் அச்சிறுமி பயணம் செய்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, நேற்று பிற்பகலில் கார்த்தியைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஏற்கனவே அறிமுகமான அந்தச் சிறுமிக்குச் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று இக்கொடூர செயலில் ஈடுபட்டதை அவன் ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோகன்ராஜ் என்பவருக்கு இந்த விவகாரம் தெரிந்தும் வெளியில் சொல்லாமல் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
குற்றவாளிக்குக் கால் முறிவு

இச்சம்பவம் தொடர்பாகக் கார்த்தி மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் ஆகிய இருவர் மீதும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளியான கார்த்திக்குக் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Post

உருவாகிறது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Posted by - November 27, 2023 0
சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.…

சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி

Posted by - February 17, 2023 0
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து…

தொகுதி வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் ஒரு வார்ததை கூட பேசாத திமுக எம்.பி.க்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Posted by - April 10, 2024 0
வரும் நாடாளுமன்றத் தேர்தல், நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் தேர்தல். நாட்டை…

கரூர் துயரம்: உயிரிழந்தோர் குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறிவரும் விஜய்!

Posted by - October 7, 2025 0
கரூர்: கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத்…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் – சமாதானம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - February 28, 2024 0
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சமாதானமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *