cm excm e1778496668618

CM Vijay Meets MK Stalin: ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்; 5 நிமிட சந்திப்பில் நடந்தது என்ன.?

132 0

CM Vijay MK Stalin Meeting: சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் முடிவடைந்த நிலையில், அங்கிருந்து நேராக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்து பேசினார் முதலமைச்சர் விஜய். அப்போது அவர்கள் பேசியது என்ன.?

சட்டப்பேரவையில் இன்று எம்எல்ஏ-க்கள் முறையாக பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து, இன்றைய நிகழ்வுகள் முடிவடைந்த நிலையில், தலைமைச் செயலகத்திலிருந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்னின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்.

அப்போது, விஜய்யை கட்டியணைத்து வரவேற்றார் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து, வீட்டிற்குள் வந்த விஜய்யை ஆரத்தழுவி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

மு.க. ஸ்டாலின் – விஜய் பேசியது என்ன.?

முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழாவிற்கு மு.க. ஸ்டாலின் வராத நிலையில், அவரை மரியாதை நிமித்தமாக அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார் முதலமைச்சர் விஜய். அப்போது, அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார் விஜய். தொடர்ந்து, மு.க. ஸ்டாலின் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், தனது தலைமையிலான புதிய அரசு சிறப்பாக செயல்பட ஆதரவையும், அறிவுரைகளையும் வழங்குமாறு  முதலமைச்சர் விஜய், மு.க. ஸ்டாலினை கேட்டுக்கொண்டார்.

முதல் நாளே விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்

முன்னதாக, முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன் என கூறியிருந்தார்.

மேலும், தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? என கேள்வி எழுப்பியிருந்த ஸ்டாலின், அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! என விமர்சனம் செய்திருந்தார்.

“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்! என பதிவிட்டிருந்தார்.

6 மாதங்கள் பார்ப்பேன் என்று கூறிய ஸ்டாலின்

முன்னதாக, விஜய் தேர்தலில் வெற்றியடைந்த நாள் அன்று பேட்டியளித்திருந்த முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 6 மாதங்கள் வரை புதிய அரசை விமர்சிக்க மாட்டேன், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

அதை வாங்கி ஓசி சோரு சாப்புட்ற!! காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை அவமானப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்.

Posted by - ஜூலை 17, 2023 0
விக்ரமன் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் விக்ரமன். அவர் சின்னத்திரையில் பணியாற்றி இருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்…

தினமும் ‘இத்தனை’ படிக்கட்டுகள் ஏறுனா போதுமாம்… உங்களுக்கு மாரடைப்பே வராதாம் தெரியுமா?

Posted by - அக்டோபர் 28, 2023 0
தினமும் படிக்கட்டுகளில் ஏறுவதை உங்கள் உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக மாற்றுங்கள். ஒருநாளைக்கு 50 படிக்கட்டுகளுக்கு மேல் ஏறுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஒரு…

“யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும்…” – நயன்தாரா மறைமுக சாடல்

Posted by - ஜனவரி 11, 2025 0
தன்னம்பிக்கை நமக்கு வரவேண்டும் என்றால் நேர்மையாக உழைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் யார் என்ன சொன்னாலும், நம்மை எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும், நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும்,…

ஓலா, ஊபர் போராட்டம் எதிரொலி: 20 கிலோமீட்டருக்கு ரூ.1000 கட்டணம் – பயணிகள் கடும் அதிர்ச்சி

Posted by - அக்டோபர் 18, 2023 0
சென்னை: ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை…
mks scaled

DMK ELECTION PLAN: இனி கூட்டணி இல்லை.! தேர்தலில் தனித்து போட்டி.? திமுகவினரை குஷியாக்க ஸ்டாலின் போட்ட செம பிளான்

Posted by - ஜூன் 25, 2026 0
DMK ELECTION PLAN: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்துள்ள நிலையில், வரும் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து களம் இறங்க திமுக…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன