ChatGPT Image May 10 2026 07 13 53 PM

AIADMK: உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!

62 0

AIADMK Legislative Party Leader: அதிமுக உடைந்ததாக தகவல் வெளியாகி இபிஎஸ் அதை மறுத்த நிலையில், 30 எம்எல்ஏ-க்களுடன் பேரவைக்கு சென்று எஸ்பி வேலுமணியை சட்டமன்ற குழு தலைவராக்க, சிவி சண்முகம் கடிதம் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்திற்கு வந்து, சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணி உருவாகியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று காலை 17 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதத்துடன் பேரவையில் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழுத் தலைவராக நியமிக்குமாறு கோரப்பட்டது. இதையடுத்து, 30 எம்எல்ஏ-க்களின் நிலை என்ன.? கட்சி உடைந்துவிட்டதா என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, அது வெறும் வதந்தி என்றும், அதில் உண்மையில்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது, சிவி சண்முகம் தலைமையில், எஸ்பி வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக நியமிக்க வேண்டும் எனக் கோரி, 30 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதங்களுடன், தலைமைச் செயலகம் சென்று, தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Post

உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்…

Posted by - March 25, 2025 0
வாணியம்பாடி அருகே தேர்வுக்காக காத்திருந்த 12-ம் வகுப்பு மாணவி, நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்காமல் வேகமாக சென்றதால், அதை பின் தொடர்ந்து சென்று பேருந்தில் ஏறிய வீடியோ…

“பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு“ – கடுமையாக விமர்சித்த முதல்வர்

Posted by - June 19, 2025 0
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கீழடி விவகாரத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கடிதத்தின் விவரங்களை காணலாம். திமுக தலைவர் ஸ்டாலின்,…

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: யாரெல்லம் தகுதியானவர்கள்; விண்ணப்பிப்பது எப்படி… முழு விவரம்!

Posted by - April 22, 2024 0
ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித…

தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டம்.. செயற்குழு உறுப்பினர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அழைப்பு

Posted by - February 7, 2024 0
நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி…

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் – போர்களம் போல காட்சியளிக்கும் அன்பழகன் வளாகம் | Teachers Protest

Posted by - October 4, 2023 0
சம வேலைக்கு சம ஊதியம்: தொடரும் ஆசிரியர்கள் போராட்டம். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் நடத்திய இரண்டு சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *