add a breaking news banner at the top of the image

CM Vijay Speech: மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.. விஜய் அறிவிப்பு!

88 0

CM Vijay First Speech: நான் உங்க குடும்பத்தில் இருந்து வந்த ஒருவன் தான். அப்படித்தான் நான் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான் சினிமாவில் மிகப்பெரிய இடம் கொடுத்தீர்க்கள். இப்போது நன்றிக்கடன் செலுத்த அரசியலுக்கு வந்துள்ளேன்.

தமிழ்நாடு அரசு என்ன நிலைமையில் இருக்கிறது என்பது தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன் என முதலமைச்சர் vijay தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் புதிய  முதலமைச்சராக விஜய் இன்று பொறுப்பேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பங்கேற்றனர். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல்குமார், டி.கே.பிரபு, கீர்த்தனா, அருண்ராஜ், வெங்கட் ரமணன், ராஜ்மோகன் ஆகியோர் அமைச்சராக பதவியேற்றனர். தொடர்ந்து மேடையில் 200 யூனிட் மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு போன்றவை தொடர்பான 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இதனைத் தொடர்ந்து மக்களிடம் பேசிய விஜய், “சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றி அடைய நினைத்த ஒரு உதவி இயக்குநருக்கு பிறந்த மகன் நான். எனக்கும் வறுமை, பசி என்றால் என்ன என்பது வாழ்க்கையில் நன்றாக தெரியும். நான் மன்னர் பரம்பரையில் இருந்து எல்லாம் வரவில்லை. நான் உங்க குடும்பத்தில் இருந்து வந்த ஒருவன் தான். அப்படித்தான் நான் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான் சினிமாவில் மிகப்பெரிய இடம் கொடுத்தீர்க்கள்.

இப்போது அதை விட்டு விட்டு நன்றிக்கடன் செலுத்த அரசியலுக்கு வந்த என்னை நாங்கள் பார்த்துக்கிறோம் என சொல்லி அவ்வளவு அன்பாக, உறவாக என்னை ஏற்றுக் கொண்டீர்கள்.இந்த அரசியல் பயணத்தில் எனக்கு எவ்வளவோ கஷ்டம், அவமானம் இருந்தது.என்னுடன் இருந்த உங்களுக்கும் அதே கஷ்டம், அவமானம் ஏற்பட்டாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னைக்கு சி.ஜோசப் விஜய் என்னும் நான் என்பதை உண்மையாக்கி கொண்டிருக்கிறீர்கள். நான் ஒன்னும் தேவதூதன் இல்லை. சாதாரண வாழ்க்கை வாழ்பவன். அது செய்பவன், இது செய்பவன் என பொய் வாக்குறுதிகளை கொடுக்க மாட்டேன். எது முடியுமோ அதை மட்டுமே செய்வேன். இன்னொரு விஷயமும் தமிழ்நாடு அரசு இருக்கும் நிலைமையை நான் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். கஜானாவை சுத்தமாக துடைத்து வைத்து விட்டு சென்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைமையில் தான் தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் நிலைமை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடுவேன். நான் சொன்னதையெல்லாம் படிப்படியாக நிறைவேற்றுவேன். கொஞ்சம் அவகாசம் மட்டும் கொடுங்கள். இது உங்கள் ஆட்சி” என தெரிவித்துள்ளார்.

Related Post

வாயை மூடிக்கிட்டிரு… பெண்ணை அதட்டிய அமைச்சர் பொன்முடி

Posted by - March 16, 2023 0
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி  மக்களிடையே சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார் .   பேருந்தில் பெண்களுக்கு இலவச திட்டம் தமிழக அரசு கொண்டு வந்திருப்பதை,…

அதை வாங்கி ஓசி சோரு சாப்புட்ற!! காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை அவமானப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்.

Posted by - July 17, 2023 0
விக்ரமன் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் விக்ரமன். அவர் சின்னத்திரையில் பணியாற்றி இருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்…

ரஜினி இதெல்லாம் விட்டறலாமே.. ரசிகர்கள் கெட்டுட போறாங்க.. ஜானகி அம்மாவிடம் எம்ஜிஆர் வருத்தம்

Posted by - November 26, 2024 0
தமிழ் சினிமாவில் எம்.கே. தியாகராஜ பாகவதருக்குப் பின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தவர் எம்.ஜி.ஆர். இவர் ரஜினியைப் பற்றி ஜானமி அம்மாவிடம் கூறிய சம்பவத்தை ரஜினி பகிர்ந்துள்ளார். முன்னாள்…

“சனிக் கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தத் திட்டம்…” – அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்..!

Posted by - June 11, 2023 0
பள்ளிகளை தாமதமாக திறப்பதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல். சனிக்கிழமைகளில் பள்ளிகளின் வேலை…

ஏசி வாங்க பட்ஜெட் இல்லையா? கோடையை சமாளிக்க குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ஏசிக்களின் பட்டியல் இதோ.

Posted by - May 2, 2024 0
MarQ FKAC103SFAA  : இந்த ஏசியின் விலை வெறும் 18,888 மட்டுமே. இந்த 3 ஸ்டார் ரேட்டட் ஏசிக்கு 230 வி 50 ஹெர்ட்ஸ் மின்சாரம் தேவைப்படும். இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *