add an exclusive news banner at the top of the ima

முதல்வராக விஜய் பதவியேற்பு விழா.! ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக, அதிமுக- காரணம் என்ன.?

72 0

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில், இந்த விழாவில் திமுக, அதிமுக ஆகிய கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வராக பதவியேற்ற விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது தவெக, இதுவரை அதிமுக, திமுக என மாறி மாறி ஆட்சியை புரிந்து வந்த தமிழகத்தில், 59 ஆண்டு கால வருட திராவிட ஆட்சிகளுக்கு தவெக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அந்த வகையில் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை வீழ்த்தி 108 தொகுதிகளை கைப்பற்றி தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருந்த போதும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத காரணத்தால் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஐயூஎம்எல் உதவியோடு ஆட்சி அமைத்தார் விஜய்,

முதல்வர் பதவியேற்பு விழா

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில்,  காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த விழாவில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக, திமுகவினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.

அதே நேரம் கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக அரசு பதிவியேற்பு விழாவில் எதிர்கட்சியாக இருந்த திமுக சார்பாக ஸ்டாலின் கலந்து கொண்டார். இதேபோல 2021ஆம் ஆண்டு திமுக அரசு பதவியேற்ற போது அதிமுக சார்பாக ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகராக இருந்த தனபால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

புறக்கணித்த திமுக, அதிமுக

ஆனால் இன்று தவெக அரசு பதவியேற்ற போது திமுக மற்றும் அதிமுக சார்பாக எந்த நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவினருக்கு தவெக சார்பாக  அழைப்பு விடுக்கவில்லையா.? அல்லது வேண்டும் என்றே திமுக மற்றும் அதிமுகவினர் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார்களா.? என கேள்வி எழுந்துள்ளது.

Related Post

“இந்த முறை வேறு தொகுதி..” – உதயநிதி தொகுதி மாறுகிறாரா? 2026 தேர்தல் குறித்து கொடுத்த ஹின்ட்!

Posted by - January 10, 2025 0
திமுக ஆட்சியில் முதலமைச்சர் நிச்சயமாக எந்தவொரு குற்றவாளியையும் தப்பிக்கவிடமாட்டார் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200 கூட்டணி தொகுதிகளில் வெற்றிபெறும் என…

இனியும் பெண் கொடுக்க தயங்குவீர்களா…! ஒரே நாளில் ரூ.4 லட்சத்திற்கு தக்காளி விற்பனை செய்த விவசாயி

Posted by - August 2, 2023 0
திருப்பூர்: தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருவதால், நடுத்தர…

இடத்தகராறு காரணமாக வழக்கறிஞர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை – தென்காசியில் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே இடத்தகராறு நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்…

தமிழ்நாடு-புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது: 9.76 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் ….

Posted by - April 6, 2023 0
தேர்வு மையங்களுக்குள் மின் சாதன பொருட்கள், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற…

ஜெயலலிதாவின் விசுவாசி.. பால் பிசினஸில் கொடி கட்டி பறந்த நயினார்.. யார் இந்த திருநெல்வேலிக்காரர்? Nainar Nagenthran to be 13th Tamil Nadu BJP president….

Posted by - April 11, 2025 0
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எட்டே ஆண்டுகளில் அதன் மாநில தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *