CSK அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகல் – புதிய கேப்டன் யார் தெரியுமா..?

269 0

13 வருடங்களாக சிஎஸ்கேவின் கேப்டனாக இருந்து வந்த எம்.எஸ். தோனி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி (நாளை) சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது .

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் தங்களை தீவிரமாக ஆயுத்தபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 13 வருடங்களாக சிஎஸ்கே ஆஸ்தான கேப்டனாக இருந்து வந்த எம்.எஸ். தோனி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் கேப்டன்களுடன் கோப்பையை வைத்து எடுக்கப்பட்ட குழு படத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அந்த குழு புகைப்படத்தை சென்னை அணியின் கேப்டன் ஸ்தானத்தில் எம்.எஸ்.தோனிக்கு பதிலாக இளம் வீரர் ருதுராஜ் நிற்கிறார். இதனால் ரசிகர்கள் பலத்த குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் வெல்கம் நியூ கேப்டன் ஆப் சிஎஸ்கே என ருதுராஜை வரவேற்றுள்ளனர்.ஏற்கனவே தல தோனி இந்த தொடருடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து 13 வருடங்களாக ஒரு சிங்கம் போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்திய எம்.எஸ்.தோனி அவர்களுக்கு பிக் சலூட் என ரசிகர்கள் அனைவரும் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Related Post

நான் ஃபினிஷர் தான்டா..! தோனியின் 5 வருட காத்திருப்பு, மூச்சு விடும் சென்னை – ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மாற்றம் என்ன?

Posted by - April 15, 2025 0
தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி…

IPL 2023 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சென்னை அணிக்கான வாய்ப்புகள் என்ன?

Posted by - May 17, 2023 0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றிகளை பதிவு செய்து 15 புள்ளிகளோடு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில்…

நீங்களே இப்படி பண்ணலாமா.. போட்டிக்கு நடுவே காவ்யா மாறன் எடுத்த முடிவு.. இத கவனிச்சீங்களா..

Posted by - May 27, 2024 0
17 வது ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி இருந்த நிலையில் இந்த போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக…

எனக்கு பயந்து வருது, கண்ணீரோடு எதிர்நீச்சல் சீரியல் நந்தினி வெளியிட்ட வீடியோ- ரசிகர்கள் சோகமான கமெண்ட்

Posted by - June 8, 2024 0
எதிர்நீச்சல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியலுமே மக்களின் ஆதரவை பெறுவதில்லை. ஆனால் ஒரு சில தொடர்கள் முடிவுக்கு வந்தால் மக்களும் சரி, அதில் நடித்த நடிகர்களும் சரி…

இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் மோதல்! மன்னிப்பு கேட்ட நடுவர்.. சூடுபிடிக்கும் சூப்பர் 4 போட்டிகள்

Posted by - September 18, 2025 0
ஆசியக் கோப்பையில் நடப்பு சாம்பியனான இந்தியா, மீண்டும் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. ஆசியக்கோப்பை போட்டியின் சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *