TNASSEMBLY 1

DMK TVK: எங்கே போனது BJP எதிர்ப்பு? ”ஒன்றியம், கண்டனம்” இல்லையா உதயநிதி? உயிர்கள் போகிறது CM விஜய் சார்?

99 0

DMK TVK CJP: பாஜக எதிர்ப்பு எங்கே போனது என ஆளுங்கட்சியான தவெகவிற்கும், எதிர்க்கட்சியான திமுகவிற்கும் நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்புகின்றனர்.

DMK TVK CJP: தேர்தலுக்கு முன்பாக நீடித்து வந்த தீவிர பாஜக எதிர்ப்பு தமிழ்நாட்டில் தற்போது நீர்த்துபோயுள்ளதா? என பொதுமக்களுன் பேச தொடங்கியுள்ளனர்.

CJP போராட்டத்தால் குலுங்கும் டெல்லி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக  மத்திய அரசுக்கு எதிராக CJP அமைப்பினர் தலைநகர் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் நாட்டையே அதிரச் செய்துள்ளது. குறிப்பாக நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. போலீசாரே கல்வீச்சில் ஈடுபட்டது, வாகனங்களை அடித்து உதைத்து, மாணவிகளுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்தது போன்ற சம்பவங்கள் அராஜகத்தின் உச்சமாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு மாநில அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களையும் ,எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றன. ஆனால், நாட்டிலேயே பாஜகவை மிகவும் தீவிரமாக எதிர்க்கும் மாநிலமாக கூறப்படும் தமிழ்நாட்டில், இந்த போராட்டம் தொடர்பாக எந்தவொரு அரசியல் தலைவரும் வலுவான கருத்துகளை தெரிவிக்கவில்லை.

உயிர்கள் போகிறது CM விஜய் சார்?

நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டபோது, அவரது வீட்டிற்கே நேரில் சென்று நடிகராக இருந்த விஜய் ஆறுதல் கூறியிருந்தார். இந்நிலையில் தான் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் மனமுடைந்து, தமிழ்நாட்டில் மட்டும் 3 பேர் உட்பட தேசிய அளவில் சுமார் 20 பேர் வரை தற்கொலை செய்துகொண்டனர். ஆனால், இதுகுறித்தோ அல்லது அண்மையில் டெல்லியில் மாணவர்கள் மீது காவல்துறையால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை குறித்தோ முதலமைச்சர் விஜய் எந்தவொரு எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிக்காமலே தொடர்கிறார்.

ராகுல் காந்தி கைதான நடவடிக்கையை மட்டும் கண்டிக்கத்தக்கது என தவெக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு என்ன பொருள்? கொள்கை எதிரி பாஜகவை விமர்சிக்க விஜய் அஞ்சுகிறாரா? அல்லது ஆட்சி நீடிக்கவும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் மத்திய அரசின் தயவு தேவை என வாய் திறக்க தயங்குகிறா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

திமுகவின் பாஜக எதிர்ப்பு எங்கே?

மூச்சுக்கு முந்நூறு முறை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு உள்ளே வந்துவிடும் என கூறியே சட்டமன்ற தேர்தலை திமுக எதிர்கொண்டது. ஆளுங்கட்சியாக இருந்தபோது எந்தவித பாகுபடும் இன்றி பாஜகவிற்கு எதிராக களமாடி வந்தது. ஆனால், தற்போது அந்த கட்சியின் செயல்பாடு அப்படி இல்லை. மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்ட பதிவில், “இளைஞர்கள் மீது காவல்துறை காட்டிய அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின்  கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, அரசு தனது காவல்துறையைக் கொண்டு பதிலடி கொடுக்கிறது” குறிப்பிட்டு இருந்தார். அதவாவது திமுக பின்பற்றி வந்த “ஒன்றிய அரசு” என்பதோ, அரசுக்கு ”கண்டனம்” என்பதோ அந்த பதிவில் இல்லை.இதனால், தேர்தலுக்கு முன்பாக திமுகவால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த தீவிர பாஜக எதிர்ப்பு தற்போது நீர்த்துபோனது ஏன்? வழக்குகளுக்காக அஞ்சுகிறீர்களா? அல்லது மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர பாஜகவுடன் கூட்டணி சேர முயல்கிறீர்களா? அனுபவம் இல்லாத கட்சி என்று தவெகவை விமர்சிக்கும் வேளையில், தமிழ்நாட்டின் மிகவும் வலுவான கட்டமைப்பை கொண்ட கட்சியான திமுகவும் மக்கள் நலனில் இப்படி பின் வாங்கலாமா? என பொதுமக்களும், நெட்டிசன்களும் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Post

Tasmac Digital Stock Order

Tasmac Digital Stock Order : டோட்டலா மாறும் டாஸ்மாக்.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் மதுப்பிரியர்களுக்கு குஷி தான்- செம பிளான்

Posted by - ஆகஸ்ட் 30, 2026 0
Tasmac New Digital Stock Order System : டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கேட்கும் மதுபானங்கள் கிடைக்காத நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மதுப்பிரியர்கள் விரும்புப்…

மருத்துவ குணம் மிகுந்த நீலகிரி பூண்டுக்கு அமோக கிராக்கி: கிலோ ரூ.140-க்கு கொள்முதல்

Posted by - ஜூலை 4, 2023 0
அரவேணு: கோத்தகிரி அருகே கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூண்டுகளை பயிரிட்டு வருகின்றனர். நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக…

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – அடுத்த 3 மணிநேரம் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்

Posted by - டிசம்பர் 11, 2023 0
தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன்…
aqwertyujkl

TVK VCK Alliance: சல்லிசல்லியாகும் திமுக கூட்டணி.! விசிக-வை கூட்டணிக்கு அழைத்த விஜய்.? வருவாரா திருமா.?

Posted by - மே 6, 2026 0
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு ஏற்கனவே காங்., சிபிஐ கட்சிளுக்கு அழைப்பு விடுத்த விஜய், விசிக தலைவர் திருமாவளவனுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால், திமுக கூட்டணியில்…
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த செய்தி

திருப்பரங்குன்றம் தீபத்தூண்: உச்ச நீதிமன்றம் அனுமதி

Posted by - நவம்பர் 20, 2026 0
திருப்பரங்குன்றம் தீபத்தூண் பகுதியில் வரும் கார்த்திகை தீபத்திருநாளில் மட்டும் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அளித்த…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன