aqwertyujkl

TVK VCK Alliance: சல்லிசல்லியாகும் திமுக கூட்டணி.! விசிக-வை கூட்டணிக்கு அழைத்த விஜய்.? வருவாரா திருமா.?

65 0

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு ஏற்கனவே காங்., சிபிஐ கட்சிளுக்கு அழைப்பு விடுத்த விஜய், விசிக தலைவர் திருமாவளவனுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது. இதற்காக, ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், கூட்டணிக்காக சில கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது தவெக. அதில், காங்கிரஸ், சிபிஐ, தற்போது விசிக என, திமுக கூட்டணிக்கு உலை வைக்கும் அளவிற்கு தவெக அழைப்புகளை விடுத்துள்ளது. இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆட்சி அமைக்க ஆதரவு கோரி விசிகவிற்கு விஜய் கடிதம்

ஏற்கனவே காங்கிரஸ், சிபிஐ உள்ளிட்டோருக்கு கூட்டணி அழைப்பு விடுத்த தவெக, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு விஜய் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திமுக மீது அதிருப்தியில் இருக்கும் திருமா வருவாரா.?

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி விசிகவிற்கு தவெக சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், திருமாவளவன் வருவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஏற்கனவே, திமுக மீது திருமாவளவன் அதிருப்தியில் இருப்பது தேர்தலுக்கு முன்பாகவே வெளிப்படத் தொடங்கியது.

ஆட்சியில் பங்கு என்ற மனநிலைக்கு திருமாவளவன் வந்துவிட்டது அவரது பேச்சுக்கள் மூலம் தெரிந்தாலும், கூட்டணிக்காக திமுகவிற்கு கட்டுப்பட்டு அவர் செயல்பட்டு வந்தார். எனினும், தேர்தலுக்கு பின்பாக பேசிய அவர், விசிகவினர் தேர்தல் களத்தில் சரியாக பணியாற்றவில்லை என்பதை வெளிப்படையாகவே கூறினார். அதேபோல், அவர் கேட்ட தொகுதிகளையும் திமுக கொடுக்காததால், அதிருப்தியில் தான் இருக்கிறார் திருமாவளவன்.

இதனால், நீண்ட காலமாக அங்கம் வகித்து வரும் திமுக கூட்டணியை விட்டுவிட்டு, தவெக உடன் அவர் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போதே, கூட்டணி கட்சிகள் வந்தால், அவர்களுக்கும் ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும் என்றே விஜய் கூறினார். அதனால், ஒருவேளை திருமாவளவன் தவெக உடன் இணையலாம் என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில், அவரது முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தவெக பக்கம் வரும் காங்கிரஸ், சிபிஐ.?

மறுபுறம், ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் தவெக-விற்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், காங்கிரஸ் கட்சியின் முடிவு இன்றே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், நாளை அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டி முடிவை அறிவிப்போம் என சிபிஐ தெரிவித்துள்ள நிலையில், அவர்களும் ஆதரவு வழங்குவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காலியாகும் திமுக கூட்டணி

தவெக தற்போது அழைப்பு விடுத்திருப்பது எல்லாமே திமுக கூட்டணிக் கட்சிகள். அவர்கள் அனைவரும் தவெக உடன் கூட்டணி அமைத்தால், திமுக கூட்டணி கலகலத்துவிடும். பிரமாண்டமான கூட்டணி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறிக்கொண்டிருந்த நிலையில், அந்த கூட்டணிக்கே தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Post

1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!

Posted by - December 26, 2024 0
சட்டமன்ற தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. அரசு வாக்குகளை அள்ள புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு நடக்க…

திமுக, அதிமுகவை விட அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தவெக! மணி வார்த்தை பொய் ஆகுமா?

Posted by - October 7, 2024 0
திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகளைவிட புதிதாக தொடங்கப்பட்ட விஜயின் தவெக கட்சிக்கு அதிகளவு உறுப்பினர்கள் இருப்பதாக பிரபல ஜர்னலிஸ்ட் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில்  தளபதி விஜயின் வருகை…

பள்ளியில் கூல் லிப் பயன்படுத்தும் மாணவர்கள் – நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வேண்டுகோள்..!!

Posted by - August 24, 2024 0
சென்னையில் உள்ள பள்ளிகளில் கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வசாதாரணமாக கிடைப்பதாக வெளிவரும் செய்திகள் பேரதிர்ச்சி அளிப்பதாக தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் .…

தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு: ஆரஞ்சு அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - November 3, 2023 0
சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.3) முதல் நவம்பர் 6 வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் நாளை (நவ.4) மிக கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்சு அலர்ட்…

முக்கிய ரெயில் நிலையங்களில் ‘கியூஆர்கோடு’ ‘யு.பி.ஐ. செயலி’ மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் வசதி

Posted by - February 21, 2023 0
சென்னை: நவீன தகவல் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக அனைத்து தொழில் சார்ந்த நடவடிக்கைகளும் வங்கியின் மூலமே பணபரிமாற்றம் செய்யப்படுகிறது. கையில் ரொக்கமாக செலுத்துவதற்கு பதிலாக ‘கூகுள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *