மருத்துவ குணம் மிகுந்த நீலகிரி பூண்டுக்கு அமோக கிராக்கி: கிலோ ரூ.140-க்கு கொள்முதல்

270 0

அரவேணு:

கோத்தகிரி அருகே கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூண்டுகளை பயிரிட்டு வருகின்றனர். நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக காரத்தன்மை, மருத்துவ குணம் கொண்டது. எனவே நீலகிரி பூண்டுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.கொரோனாவால் நீலகிரி பூண்டுக்கு மவுசு அதிகரிப்பு | Nilgiri garlic people and  merchants wanted

கோத்தகிரியில் அடிக்கடி சாரல் மழை பெய்வதால், பூண்டு பயிர்கள் தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளன. இதற்கு போதிய கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து கேத்தி பாலாடாவை சேர்ந்த விவசாயி சிவகுமார் கூறுகையில், நீலகிரியில் முதல் போகத்தில் அறுவடையாகும் பூண்டு, சமையலுக்கு மட்டும் உகந்தது.

2-ம் போகத்தில் அறுவடையாகும் பூண்டு விதைக்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே 2-ம் போகத்தில் விளையும் பூண்டு விதைகளை, நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். நீலகிரி பூண்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோவுக்கு ரூ.30 மட்டுமே கொள்முதல் விலை கிடைத்தது.

இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் நடவு செய்யப்பட்ட பூண்டுக்கு, தற்போது ரூ.120 முதல் ரூ.140 வரை கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. நீலகிரி பூண்டுக்கான கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

 

 

 

 

 

Related Post

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு உணவு…

Posted by - May 26, 2023 0
வரும் 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு…

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

Posted by - June 30, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் சட்டம் ஒழுங்கு சம்பவங்களும், காவல்துறையில் நடக்கும் அவலங்களும் ஆளுங்கட்சியான திமுக-விற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த…

மெஹந்தி அலங்கார தொழில்…சிறிய முதலீடு…அதிகப்படியான இலாபம்…!

Posted by - December 20, 2024 0
தற்போதெல்லாம் குடும்ப விழா சகிதங்களில் ’மெஹந்தி அலங்கார விழா’ என்றே தனியாக ஒரு விழா எடுக்கப்படுகிறது, அது போக மணப்பெண்களும் அன்றைய காலக்கட்டத்தில் மருதாணி வைக்க ஆசைப்பட்டவர்கள்,…

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் 4வது போர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Posted by - May 31, 2023 0
சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை – சகோதரத்துவத்தை பேணிகாப்போம் என உரையாற்றினோம் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் நான்காவது போர் என விளையாட்டு…

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் நாளை உருவாகிறது- திங்கட்கிழமை புயலாக மாறும்

Posted by - May 6, 2023 0
சென்னை: தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் கடந்த 10 நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *