Jailer: ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் வந்துட்டாரு… கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

216 0

ரஜினிகாந்த் – ஜெயிலர்

வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் ஜெயிலர் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர்.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படத்தின் அட்டகாச அப்டேட்டை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த்ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்தப் படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் எஞ்சியுள்ள ஷூட்டிங்கை விரைவில் முடித்து வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர்இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜெயிலர் படத்தில் அவர் நடிக்கும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிட்டு, அவருக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

Related Post

அர்ஜுனுக்கு முன் 3 நடிகர்களை முதல்வன் படத்தில் நடிக்க வைக்க அணுகியுள்ள ஷங்கர்- யார் யார் தெரியுமா?

Posted by - February 2, 2024 0
முதல்வன் படம் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் படங்கள் அனைத்துமே மக்களிடம் நல்ல ரீச் பெறும். அப்படி 1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான்…

பாகுபலி, கே.ஜி.எஃப் படங்களை அடித்துநொருக்க வரும் தமிழ் திரைப்படம்.. டீசர் ரெடி

Posted by - March 21, 2023 0
கே.ஜி.எஃப் – பாகுபலி இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொட்ட திரைப்படங்களின் வரிசையில் பாகுபலி மற்றும் கே.ஜி.எஃப் கண்டிப்பாக இடம்பெறும். இந்த இரு திரைப்படங்களும் வசூலில் மாபெரும் சாதனை…

தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. நடிகை இவானா .

Posted by - July 2, 2025 0
நடிகை இவானா தமிழில் பாலாவின் நாச்சியார் மூலமாக அறிமுகம் ஆனவர். அடுத்து லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார்.…

வாரிசு இசை வெளியீட்டு விழா… பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்? : ஏன் தெரியுமா?

Posted by - December 26, 2022 0
varisu audio launch | வாரிசு இசை வெளியீட்டு விழாவின் போது நேரு உள்விளையாட்டு அரங்கின் இருக்கைகள் சேதமடைந்துள்ளன. விஜயின் ‘வாரிசு’ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்…

துணிவு படத்தின் கதை இது தான்! ரன்டைம் விவரமும் இதோ

Posted by - December 18, 2022 0
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை என தொடர்ந்து க்ரைம் கதைகளாக படமாக்கி வரும் ஹெச்.வினோத் தற்போது அஜித்துடன் இணைந்து எடுத்திருக்கும் துணிவு படமும் அதே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *