Kanimozhi

Kanimozhi: “உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க..” தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!

170 0

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டில் இருந்து தேர்தலில் வெற்றி பெறுவோமா? இல்லையா? என்று கேட்டு தனக்கு அழைப்பு வந்ததாக ஜோதிடரும், தவெக எம்எல்ஏ-வுமான கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுங்கட்சியான திமுக கடவுள் மறுப்பு கொள்கையை கூறி வந்தாலும், அந்த கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் பலரும் கடவுள் நம்பிக்கையுடனே உள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களுக்குச் சென்று வழிபாடும் செய்து வருகிறார்.

கடவுள் மறுப்பு கொள்கையில் திமுக-வின் செயல்பாடு எதிர்க்கட்சியினரால் பல முறை விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கவுண்டம்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தவெக எம்எல்ஏ கனிமொழி இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது,

உதயநிதி வீட்டில் ஜோசியம் பார்க்கச் சொன்னார்கள்:

எதிர்க்கட்சித் தலைவர் வீட்டில் இருந்து கூப்பிட்டு ஜெயிப்போமா? இல்லையா? என்று கேள்விகள் வருது. அவங்க எல்லாம் துரத்திடுவாங்க போல, அவர்கள் எல்லாம் ஜோதிடர் பார்க்கிறார்கள் அல்லவா? நீ போய் முதலில் உன் வீட்டில் உள்ள பெண்களை கேளுப்பா. அவங்க கூப்பிட்டு என்கிட்ட பேசுறாங்கப்பா. நான் ஆதாரம் வைத்துள்ளேன்.

பேசுன ஆதாரம் நான் வைத்துள்ளேன். உங்க வீட்டில் இருந்து யார் பேசுனாங்க? ஜெயிப்போமா? இல்லயா? என்று கேட்டது நீங்க. இன்று நீங்கள் நாங்கள் நாத்திகவாதி. நாங்கள் ஜோதிடம், ஜாதகம் நம்பமாட்டோம் என்று கூறுகிறீர்கள். முதலில் உங்க வீட்டில் இருப்பவர்களை திருத்துங்க. அப்புறம் நாட்டில் இருப்பவர்களை திருத்தலாம். மக்களின் வரிப்பணத்தில் நான் 26 கார் வாங்கி வச்சுருக்கேனா? இவங்கதான் பாத்தாங்க. பேசாமல் இருந்தால் அழகான பொம்மை என்கிறார்கள். இது ஆபத்தான பொம்மையும் கூட. தூரத்தில் இருந்து முகம் தெரியாமலே பேசிக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பெரும் பரபரப்பு:

சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி அடிப்படையில் ஒரு ஜோதிடர். இவர் ஜோதிடர் என்பதாலும். இவரது கடந்த கால வீடியோக்களை வைரல் செய்து இவருக்கு தேரதலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது என்று தேர்தலுக்கு முன்பு பலரும் விமர்சித்திருந்தனர். ஆனாலும், இவர் வெற்றி பெற்றார்.

திமுக-வினர் பெரியாரின் கொள்கையை முழுவதும் பின்பற்றுவதாக கூறி வந்தாலும் ஜோதிட, ஜாதக நம்பிக்கை அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் பலருக்கும் இருப்பதாக தொடர்ந்து பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழலில், ஆளுங்கட்சி எம்எல்ஏ-விடம் உதயநிதி ஸ்டாலினின் குடும்பத்தினர் ஜாதகம் பார்க்க அணுகியிருப்பதாகவே ஜோதிடரும், எம்எல்ஏ-வுமான கனிமொழி கூறியிருக்கும் தகவல்கள் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Related Post

சென்னையில் நில அதிர்வுக்கு மெட்ரோ பணிகள் காரணமில்லை- மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம்

Posted by - பிப்ரவரி 22, 2023 0
சென்னை அண்ணா சாலையில் இன்று காலை 10 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டது. இதன் காரணமாக, அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்…

கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாக கூறி வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.82 ஆயிரம் மோசடி

Posted by - ஜூன் 27, 2023 0
போரூர்: ராமாபுரம், ராயலா நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி ஆரோக்கியராஜ். ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் கேன்டீன் நடத்தி வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு…

‘இந்தி தெரியாது போடா’ என சொல்லிவிட்டு இப்ப ‘கேலோ இந்தியா’-வாம்… சூடு, சொரணை இல்லாத உதயநிதி – நடிகை விந்தியா விமர்சனம்

Posted by - ஜனவரி 29, 2024 0
திமுக இளைஞரணி மாநாடு பயனுள்ளதாக இல்லை என்றும், அது சர்க்கஸ் மாநாடு என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா கிண்டலடித்துள்ளார். பழனியில் முன்னாள்…

சென்னையில் உச்சகட்ட பதற்றம்…. குவிந்த போலீசார் |

Posted by - டிசம்பர் 26, 2025 0
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். முற்றுகை போராட்டத்தில்…

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் – இப்படியா பண்றது?

Posted by - மே 13, 2025 0
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை அனைவரும் வரவேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டின் இரு தலைவர்களுக்கிடையே எக்ஸ் தளத்தில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது. ஸ்டாலின், இபிஎஸ்-ன் பதிவுகள் என்ன.? பார்க்கலாம்……

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன