CM Vijay: நெருங்கும் இடைத்தேர்தல்; தாராபுரத்தில் இன்று விஜய் பரப்புரை…! என்ன பேசப்போகிறார் முதலமைச்சர்?

93 0

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக விஜய் இன்று பரப்புரையில் ஈடுபடுகிறார்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

5 முனைப்போட்டி:

இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் போட்டி மிகவும் வலுவாக அமைந்துள்ளது. ஆளுங்கட்சியான தவெக – எதிர்க்கட்சியான திமுக – முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுக – நாம் தமிழர் – தவெக அரசுக்கு ஆதரவாக உள்ள கம்யூனிஸ்ட் என 5 முனைப் போட்டி நிலவி வருகிறது.

தாராபுரத்தில் இன்று பரப்புரை:

இந்த சூழலில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவிற்கு ஆதரவாக இன்று முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை செல்கிறார். அங்கிருந்து சாலை வழியாக தாராபுரம் செல்கிறார்.

தாராபுரத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு அவர் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதற்காக 34 ஏக்கர் பரப்பளவில் நிலம் தயார் செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் இந்த பரப்புரையில் பங்கேற்க சுமார் 5 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் இன்று தாராபுரத்தில் பரப்புரையில் ஈடுபடுவதால் கோவை விமான நிலையம் முதல் தாராபுரம் பரப்புரை பகுதி வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு:

இதற்காக சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விஜய்யின் பரப்புரை காரணமாக தாராபுரத்தில் பரப்புரை நடைபெறும் பகுதி மற்றும் விஜய் வந்து செல்லும் நேரங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியாக தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியை நடத்தும் தவெக-விற்கு இந்த இரு தொகுதிகளின் வெற்றி மிகவும் அவசியமானதாக உள்ளது. தற்போதைய ஆட்சி காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் நடைபெற்று வருவதால் தவெக இந்த இரு தொகுதிகளின் வெற்றிக்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

எதிர்ப்பும், நெருக்கடியும்:

ஆளுங்கட்சி என்ற அந்தஸ்துடன் தவெக இந்த இடைத்தேர்தலை எதிர்கொண்டாலும், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் ஈர்த்து அவர்களையே தவெக வேட்பாளர்களாக விஜய் களமிறக்கியிருப்பது அவருக்கு சற்று பின்னடைவையே அளித்துள்ளது. குறிப்பாக, தாராபுரத்தில் தவெக-விற்கு எதிர்ப்பு சற்று அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய கள நிலவரப்படி, மதுராந்தகம் தொகுதியில் தவெக-விற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகளவு உள்ளதாக கூறப்படும் நிலையில், தவெக-விற்கு தாராபுரத்தில் எதிர்ப்புகள் அதிகளவு இருப்பதாகவே கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்று, 3 மாதங்களிலே தவெக வேட்பாளராக களமிறங்கியுள்ள சத்தியபாமா-விற்கு பல இடங்களில் மக்கள் கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர்.

Related Post

த.வெ.க முதல் மாநாட்டிற்கு இவங்க யாரும் வர வேணாம்.. விஜய் அதிரடி உத்தரவு

Posted by - அக்டோபர் 21, 2024 0
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு! அந்த வரிசையில் தமிழக அரசியலில் விஜய் களமிறங்கியுள்ளார். இதுவரை அரசியலில் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காத அவர் பிப்ரவரியில் கட்சி ஆரம்பித்த…

மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது…

Posted by - பிப்ரவரி 21, 2024 0
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, விளம்பர ஆட்சி மட்டுமே நடத்திக் கொண்டிருக்கும் திமுக, மீண்டும் ஒரு முறை, வாக்களித்த மக்களை பட்ஜெட் மூலம் நட்டாற்றில் நிறுத்தி உள்ளதாக…
image 3

திமுகவுக்கு பலனளிக்குமா ‘டாப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம்? – மீண்டும் போராடத் தயாராகும் சங்கங்கள்

Posted by - ஜனவரி 7, 2026 0
கடந்த 2021- சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ‘பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வோம்’ என திமுக வாக்​குறுதி அளித்​தது. அது திமுக-​வின் வெற்​றிக்கு பெரிதும் உதவியது. ஆனால், 4 ஆண்​டு​களுக்​கும்…

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Posted by - மார்ச் 22, 2024 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய…

அஜித் ரசிகர்களை கவர நினைக்கும் சீமான்.. விஜய்க்கு எதிராக போடும் திட்டம்

Posted by - நவம்பர் 13, 2024 0
விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய போது சீமான் அவருக்கு ஆதரவாக பல மேடைகளில் பேசுகிறார். ஒரு அண்ணன் தம்பி பாச வெளிப்பாடாக அவரது கருத்துக்கள் இருந்து வந்தது.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன