அதிமுக பொதுச் செயலாளராகிறார் ஈபிஎஸ் – பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

332 0

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத்தலைமையை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது. அதேநேரம், அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பதை உயர்நீதிமன்றம் தான் முடிவுசெய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மட்டுமே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை கடந்த 19-ம் தேதி விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச் செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடர அனுமதித்தார். ஆனால், தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்தார். இதனைத் தொடர்ந்து, இரு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து கடந்த 22-ம் தேதி நீதிபதி விசாரித்தார். அப்போது, அனைத்து தரப்பினரும் 7 மணிநேரங்களுக்கு வாதங்களை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பில், சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடத் தடையில்லை என்றும் தீர்ப்பளித்தார்.

Related Post

15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு

Posted by - January 22, 2025 0
பாஜக சாதிவாரி கணக்கு எடுக்காது என்பது நன்றாகவே தெரியும். அப்புறம் எதுக்கு நீங்கள் அவர்களிடம் மாற்றிவிடுகிறீர்கள். என் பொம்மையைத்தான் திராவிட இயக்கத்தினரால் எரிக்க முடியும் என நாம்…

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே வெள்ளத்திற்கு காரணம்: சீமான் காட்டம்…

Posted by - December 6, 2023 0
சென்னை: திமுக அரசின் தோல்வியே சென்னை வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து சீமான் கூறியிருப்பதாவது: இயற்கைச் சீற்றத்தை…

“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விட மாட்டான்”.. மாஸாக புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

Posted by - January 1, 2025 0
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த வேட்டையன் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ்…

”கேஸ் வாங்குறதுலாம் துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி..” மீண்டும் சர்ச்சையில் சிக்கும் டிடிஎஃப் வாசன்!

Posted by - December 27, 2022 0
செம்ம வெறி ஆகிட்டேன். டிடிஎஃப் பிராண்ட் உருவாக்க போறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா? – டிடிஎஃப் வாசன் நம்மை விரட்டியே…

மீனவர்கள் நலனில் ஊழல் திமுக அரசுக்கு அக்கறை கிடையாது!- அண்ணாமலை

Posted by - August 16, 2023 0
வரும் பாராளுமன்றத் தேர்தலில், சந்தர்ப்பவாத, ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்போம்  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்)…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *