%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

169 0

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூலம் விரை​வில் 2 ஆயிரம் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர் பயிற்​றுநர்​களை நியமிக்க பள்​ளிக்​கல்​வித்​துறை முடிவுசெய்​துள்​ளது. இதுதொடர்​பான அறி​விப்பு ஆகஸ்ட் மாதம் வெளி​யாகிறது.

அரசு பள்​ளி​களில் இடைநிலை ஆசிரியர்​கள், தையல், ஓவி​யம், உடற்​கல்விஉள்​ளிட்ட சிறப்பு ஆசிரியர்​கள், பட்​ட​தா​ரி, முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர்​கள் டிஆர்பி எனப்​படும் ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூல​மாக நியமிக்​கப்​படு​கிறார்​கள். அது​மட்​டுமின்றி வட்​டார கல்வி அலு​வலர், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரை​யாளர், அரசு கல்​லூரி உதவி பேராசிரியர், அரசு பாலிடெக்​னிக் விரிவுரை​யாளர் பணி​யிடங்​களும் ஆசிரியர் தேர்வு வாரி​யம் வாயி​லாகவே நிரப்​பப்​படு​கி்ன்​றன.

தற்​போது அரசு பள்​ளி​களில் 18 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன. எனினும் மாணவர்​களின் கல்வி பாதிக்​கப்​படக்​கூ​டாது என்​ப​தற்​காக அந்த பணி​யிடங்​களில் தொகுப்​பூ​தி​யத்​தில் தற்​காலிக ஆசிரியர்​கள் பணி​யமர்த்​தப்​பட்டு கற்​பித்​தல் பணி​கள் தொய்​வின்றிநடந்து வரு​கின்​றன. அரசு பள்​ளி​களில் நிரந்தர ஆசிரியர்​களை நியமிக்க வேண்​டும் என்று கோரிக்கை அரசி​யல் கட்சி தலை​வர்​களால் தொடர்ந்து வலி​யுறுத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், அரசு பள்​ளி​களில் டிஆர்பி மூலம் 2 ஆயிரம் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர் பயிற்​றுநர்​களை விரை​வில் நியமிக்க பள்​ளிக்​கல்​வித்​துறை முடிவுசெய்​துள்​ளது. இதற்​கான அறி​விப்பு ஆகஸ்ட் மா்தம் வெளி​யாகிறது. பட்​ட​தாரி ஆசிரியர் தேர்​வுக்​கான அறி​விப்பை ஆகஸ்ட் மத்​தி​யில் வெளி​யிட்டு போட்​டித்​தேர்​வினை நவம்​பர் மாதம் நடத்த டிஆர்பி திட்​ட​மிட்​டுள்​ளது. பட்​ட​தாரி ஆசிரியர் தேர்வை டெட் தாள்​-2-ல் தேர்​வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்​கள் எழுதலாம்.

பட்​ட​தாரி ஆசிரியர் மற்​றும் ஆசிரியர் பயிற்​றுநர் தேர்வை பொருத்​தவரை​யில் சம்​பந்​தப்​பட்ட பாடப்​பிரி​வில் 150 கேள்வி​களுக்​கும் கட்​டாய தமிழ் மொழி தகு​தித்​தேர்​வில் 30 கேள்வி​களுக்​கு்ம் விடையளிக்க வேண்​டும். தமிழ் தாள் தேர்​வில் குறைந்​த​பட்​சம் 40 சதவீத மதிப்​பெண் எடுக்க வேண்​டும்.

தமிழ் தேர்வு மதிப்​பெண் மெரிட் பட்​டியலுக்கு எடுத்​துக்​கொள்​ளப்​ப​டாது என்​றாலும் இதில் தேர்ச்சி பெற்​றால் மட்​டுமே விண்​ணப்​ப​தா​ரரின் பாடத்​தேர்வு விடைத்​தாள் மதிப்​பீடு செய்​யப்​படும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. கடைசி​யாக பட்​ட​தாரி ஆசிரியர் தேர்​வானது கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்வு நடத்​தப்​பட்டு அதன்​மூலம் 2,582 ஆசிரியர்​கள் தேர்​வு செய்​யப்​பட்​டனர்.

Advertisement

Related Post

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - பிப்ரவரி 23, 2023 0
டெல்லி: ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற…

டெலிவரி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் – தமிழக அரசின் முடிவும் நன்மைகளும்!

Posted by - ஆகஸ்ட் 17, 2023 0
இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை தமிழ்நாடு முதல்வர்…

அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்

Posted by - ஜூலை 3, 2025 0
2011ல் துணை முதலமைச்சரின் பிஏ-வை வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கின் எஃப் ஐஆர் தற்போது வெளியாகியுள்ளது. திருப்புவனம் இளைஞர் அஜித்…

நிறைவடைந்தது ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம்; தமிழக அரசு முக்கிய முடிவு

Posted by - ஜனவரி 5, 2025 0
2019-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 2019…
Durimurugan

Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்

Posted by - அக்டோபர் 6, 2026 0
Duraimurugan DVAC: திமுக ஆட்சிக்காலத்தில் 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) விசாரணையை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன