Gemini Generated Image po1o0gpo1o0gpo1o

TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்… கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி ‘ப்ராமிஸ்’!

158 0

அடிப்படை காவலர்களுக்கான பணி ஊதியம் ரூ.18,200ல் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்தார்.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று திருப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார், அப்போது தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை விஜய் இன்று வெளியிட்டார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள அவிநாசி சந்திப்பில் மக்களை சந்தித்தார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து வருகை தந்த அவருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

100 சதவிகிதம் நம்பலாம்

இதனையடுத்து பேசிய விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே என தனது உரையை தொடங்கிய விஜய், ஏப்ரல் 16ம் தேதி தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிடுகிறோம். இப்போது சில வாக்குறுதிகளை தெரிவிக்கிறேன் என சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து விவசாயிகள், சிறு குறு வணிகர்களுக்கான வாக்குறுதிகளையும் அவர் வழங்கினார். பின்னர் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நீங்கள் இந்த விஜயை 100 சதவிகிதம் நம்பலாம். நான் உங்களுக்காக மட்டும் தான் வந்திருக்கிறேன். நன்றி கடன் செலுத்த வந்துள்ளேன். பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்ற மாட்டேன். அதனால் உங்களில் ஒருவனாக எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இங்கு விசில் புரட்சி தேவை. நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும்” என தெரிவித்தார்.

காவலர்களுக்கான வாக்குறுதிகள்

  • காவலர்களின் அடிப்படை மாத ஊதியம் ரூ.18,200 இலிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.
  • அதிக மன அழுத்தம் உள்ள பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு மாதம் ரூ.1,000 பணிப் படியாகக் கூடுதலாக வழங்கப்படும்.
  • காவலர் நலன் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டம் இயற்றப்படும். இதன் மூலம் பணி நேரங்கள் முறைப்படுத்தப்படும்.
  • அதிக வேலைச் சுமை கொண்ட காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு சுழற்சி முறை விடுமுறை உறுதி செய்யப்படும்.
  • காவலர்களுக்கான சலவைப் படியை ரூ.500 இலிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்படும்.
  • மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் காவலர் நல மருத்துவமனைகள் நிறுவப்படும்.
  • பெண் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நெறிமுறை அல்லது பாதுகாப்புப் பணிகளுக்கு பணியமர்த்தப்பட மாட்டார்கள்.
  • பெண் காவல்துறை பணியாளர்களுக்கு தனி ஓய்வறைகள் மற்றும் நடமாடும் டாய்லெட் யூனிட்டுகள் அமைக்கப்படும்.

Related Post

நடிகர் அவதாரம் எடுத்த பாஜகவின் ஹெச்.ராஜா… வெளியானது ‘கந்தன்மலை’ ஃபர்ஸ்ட் லுக்!

Posted by - August 4, 2025 0
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன், ருத்ராட்ச மாலையுடன் காட்சியளிக்கிறார். பாஜகவின் தேசிய…
tvk

Kolathur Election Result: ஸ்டாலினுக்கு நிகழ்ந்த துரோகங்கள்..! கொளத்தூரில் பின்தங்க காரணம் யார்? பேக் ஃபயரான விளம்பரங்கள்?

Posted by - May 4, 2026 0
Kolathur Election Results 2026: சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பின்தங்கியிருப்பது, தமிழ்நாடு அரசியலில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Kolathur…
Gemini Generated Image ijuv8gijuv8gijuv e1775712729499

திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் – அண்ணாமலை உறுதி!

Posted by - April 9, 2026 0
கோவையில் செந்தில்பாலாஜி தோற்கடிக்கப்படுவார் என்றும், திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…

தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன்

Posted by - October 10, 2025 0
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே,…

தேர்தல் வருதுல்ல… திட்டக்குடி பெண்களுக்கு அமைச்சரின் தீபாவளி கிஃப்ட்!

Posted by - October 11, 2025 0
பொதுவாக பக்கா திமுக காரர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழகமாட்டார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால் இந்தத் தீபாவளிக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தனது திட்டக்குடி தொகுதி பெண்களுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *