tvkvijay

தவெக உத்தேச அமைச்சர் பட்டியல் தயாரித்தாக திமுக பொய்ப் பிரச்சாரம்: சி.டி.நிர்மல்குமார்

145 0

சென்னை: “சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உத்தேச அமைச்சர் பட்டியல் விவகாரம் முற்றிலும் பொய்யான பிரச்சாரம். திமுகவினரே இது போன்று திட்டமிட்டு பரப்புகின்றனர்” என தவெக இணை செயலாளர் சி.டி.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்த்து அலை அலையாக வாக்களித்துள்ளனர். தோல்வி பயத்தால் திமுகவினர் வழக்கம்போல் ரவுடி தனத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் தவெகவினர் தாக்கப்பட்டுள்ளனர். திருச்சி கிழக்கில் இரவு ஒரு மணி வரை கள்ள ஓட்டு பதிவு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. எல்லா இடத்திலும் அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியோடு திமுகவினருக்கு துணை போகின்றனர்.

நாங்கள் அளித்த புகார் தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. பேருந்து வசதி வேண்டுமென்றே தடை செய்யப்பட்டது. முக்கியமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. 20 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

ஸ்டாலினும், உதயநிதியும் செய்யும் ஒரே பெரிய வேலை தேர்தலில் பிரச்சாரம் செய்வதுதான். இனிமேல் அவர்களுக்கு முழு ஓய்வுதான். தீயசக்தியான திமுகவை எதிர்த்துதான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் களத்திலேயே இல்லாத பாஜகவைப் பற்றி எதற்கு பேச வேண்டும். மக்களே புறக்கணித்த கட்சி பாஜக. அதே வேலையில் பேச வேண்டிய இடத்தில் நிச்சயம் பேசுவோம்.

முதல்வர் கொடைக்கானலுக்கு சென்று இருக்கிறார். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இம்முறை அதிகப்படியான மக்கள் வாக்களித்துள்ளனர்” என்றார்.

பின்னர், தவெகவின் அமைச்சர் பட்டியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உத்தேச அமைச்சர் பட்டியல் விவகாரம் முற்றிலும் பொய்யான பிரச்சாரம். திமுகவினர் இது போன்று திட்டமிட்டு பரப்புகின்றனர்” என்று தெரிவித்தார்.

Related Post

lawrance

Raghava Lawrence Politics: அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டது.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

Posted by - June 12, 2026 0
Raghava Lawrence Politics : நான் அரசியலில் ஈடுபடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. பணம் சம்பாதிப்பதிலோ அல்லது பதவியை அடைவதிலோ எனக்கு எந்த நோக்கமும் இருந்ததில்லை என…

இன்று நெல்லை வரும் அமித்ஷா.. நயினார் வீட்டில் விருந்து..! விஜய்க்கு எதிராக வியூகம் வகுப்பாரா?

Posted by - August 22, 2025 0
திருநெல்வேலியில் இன்று நடக்கும் பாஜக பூத் கமிட்டி முதல் மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா இன்று வருகிறார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  அதற்கான…
Generated Image November 27 2025 10 36AM

விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்… கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக

Posted by - November 27, 2025 0
#Sengottaiyan அதிமுக மூத்த நிர்வாகியும், மாஜி அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்க எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததையடுத்து தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தார்.…
dmk

கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

Posted by - April 16, 2026 0
கமல்ஹாசன் திமுக-வை கடந்த தேர்தலில் விமர்சித்துப் பேசியதையும், இந்த தேர்தலில் திமுக-வை புகழ்ந்து பேசுவதையும் ஒப்பிட்டு இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாட்டில்…

”தமிழக அரசே.. விஜயை சுதந்திரமாக பேச விடுங்க” காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை

Posted by - September 23, 2025 0
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுதந்திரமாக பேசவும், பயணிக்கவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். வாக்குத் திருட்டுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *