Tamil Breaking News Warning or Action

TVK Vijay: மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் – வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?

64 0

TVK Vijay: முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நாளை பனையூரில் நடைபெற உள்ளதாம்.

TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் சூழலில், முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம்:

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவகலத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் நாளை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அடுத்தடுத்து எழுந்து வரும் சர்ச்சைகள் மற்றும் அரசியல் நகர்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கட்சியை வலுப்படுத்துவது, எம்.எல்.ஏக்கள் கட்டுப்பாடுடனும், ஒழுக்கத்துடனும் செயல்பட்டு மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் எம்.எல்.ஏக்கள்:

மாற்றத்தை வழங்குவதாக ஆட்சிக்கு வந்த விஜய், முதலமைச்சராக சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டப்பட்டாலும், தவெக எம்.எல்.ஏக்களே பிரச்னைகளாக உருவெடுத்து தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் ஆகியோர் மீது எழுந்துள்ள புகார்கள் எதிர்க்கட்சிகளால் பூதாகரமாக்கப்பட்டுள்ளன.

ரவிசங்கர் விவகாரம்:

துறையூர் தொகுதி எம்.எல்.ஏவும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் கட்சியின் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். தனது பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை உள்ளிட்டவை தொடர்பாக பேச வந்த கார்த்திக்குமார் என்பவரை, துணை சபாநாயகர் தாக்கியதாக வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, அந்த நபரை மிரட்டி தான் தாக்கப்படவில்லை என்ற வீடியோவை பதிவு செய்து வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த தவெக தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.

கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி?

இதனிடையே, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ-வான அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு தவறான நோக்கத்தில் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் வீட்டிற்கே சென்று பிரச்னை செய்ததகாவும் சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானவை எனவும், திமுகவினரால் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் அருள் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார்.

முதலமைச்சர் வார்னிங்கா? ஆக்‌ஷனா?

பொதுவாக தவெகவில் எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் என்.ஆனந்த் தலைமையிலேயே நடைபெறும். ஆனால், நாளைய கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையிலேயே நேரடியாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள சம்பவங்கள் முதலமைச்சருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது ஊர்ஜிதமாகிறது. எனவே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி தலைமை சார்பில் கடும் எச்சரிக்கை வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதோடு, ஒழுங்கு நடவடிக்கை மூலம் சிலரின் மீது தீவிரமான நடவடிக்கைகளும் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, என்ன பிரச்னை கிடைக்கும் என ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், சொந்த கட்சியினரே இப்படி சர்ச்சைகளை ஏற்படுத்துவதை விஜய் சுத்தமாக விரும்பவில்லையாம். இதனால் நாளைய கூட்டம் காரசாரமாகவும், காட்டமாகவும் இருக்கும் என பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MURUGAN

முருகன் – PixelTamil.com செய்தி ஆசிரியர். தமிழ்நாடு, இந்தியா, உலகம், அரசியல் மற்றும் சினிமா தொடர்பான செய்திகளைத் துல்லியமாகவும் விரைவாகவும் வழங்குகிறார்.

Related Post

%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

Posted by - ஆகஸ்ட் 1, 2026 0
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூலம் விரை​வில் 2 ஆயிரம் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர் பயிற்​றுநர்​களை நியமிக்க பள்​ளிக்​கல்​வித்​துறை முடிவுசெய்​துள்​ளது. இதுதொடர்​பான அறி​விப்பு ஆகஸ்ட் மாதம் வெளி​யாகிறது.…

துணிவு இருந்தால்… – அஜித் படத்துக்கு ஆதரவாக மாறிய கருணாநிதி ட்வீட்- கொண்டாடும் ரசிகர்கள்

Posted by - ஜனவரி 9, 2023 0
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ட்வீட் ஒன்றை அஜித் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர் துணிவு படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்துக்கான புரமோஷன்கள்…
மீனாட்சி இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் உயர்வு - மதுரை தனிஷ்க் கொள்ளை வழக்கு

மீனாட்சி ஃபாலோயர்ஸ் ஒரே நாளில் 40K உயர்வு: தனிஷ்க் கொள்ளை

Posted by - நவம்பர் 16, 2026 0
சிறையில் இருந்தாலும் குறையாத கிரேஸ்: நகைக்கொள்ளை வழக்கில் சிக்கிய மீனாட்சிக்கு ஒரே நாளில் 40 ஆயிரம் புது ஃபாலோயர்கள்! மதுரையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நடந்த கோடிக்கணக்கான…

பள்ளிகள் திறப்பு எப்போது? தள்ளிப்போக வாய்ப்பு? அமைச்சர் அன்பில் சொன்னது என்ன?

Posted by - மே 22, 2025 0
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகான பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும்…

கழுத்து பகுதியில் Tattoo குத்திய இளைஞர் பலி.. நடந்தது என்ன? எய்ட்ஸ், ஹெபடைட்டிஸ் பி பரவும் ஆபத்து

Posted by - செப்டம்பர் 7, 2023 0
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கழுத்து பகுதியில் டாட்டூ குத்தியதால் இளைஞர் ஒருவர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் விளக்கியுள்ளார்கள். அந்த…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன