TVK vs DMK 2

TVK vs DMK: “பதறல் நிதி.. கதறல் நிதி.. ஆபாசநிதி..” உதயநிதியை தாறுமாறாக விமர்சித்த தவெக!

122 0

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மிக கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு மானியக்கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் நேற்று பதிலளித்தார். அப்போது, கடந்த கால திமுக அரசு மீதும், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது கடந்த காலங்களில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் சட்டசபையில் அவர் அடுக்கினார். பின்னர், தங்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறி திமுக வெளிநடப்பு செய்தது.

இந்த சூழலில், தவெக ஐடி விங் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

பதறல் நிதி:

Rowdytime Runner! “மூன்று நாட்கள் நேரமிருக்கிறது… நன்றாகத் தயார் செய்து வாருங்கள்!” என்று வசனம் பேசிய பால்வாடி பாப்பாவே! முதலமைச்சர் பேச ஆரம்பித்ததும் மூன்று நொடிகள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் பதறிய பதறல்நிதியே!

தாத்தா காலம் முதல் செய்த விஞ்ஞான ஊழல்களைப் பற்றி வெற்றித் தலைவர் விவரிக்கக் கேட்டதும், “வெளியே ஓடவும் முடியாமல்… உள்ளே ஒளியவும் முடியாமல்…” திரிசங்கு நிலையில் நின்று கதறிய கதறல்நிதியே!

 

ஓட்டநிதி:

ஊழல் செய்யவில்லையென்று சொல்ல டர்ரெகனா? அந்த பயம் இருக்கணும்!  வெற்றித் தலைவர் பேசி முடித்ததும், “விட்டால் போதும்!” என்று சட்டப்பேரவையை விட்டே ஓட்டமெடுத்த திராணியற்ற ஓட்டநிதியே!

செய்தியாளர்களைச் சந்திக்க 30 நிமிடம் தயாராகியும், script paper-ஐ பார்த்துப் படித்த முதுகெலும்பற்ற பேப்பர்நிதியே!

“Insta-வில் reels போடுகிறார்கள்!” என்றுவிட்டு, வீட்டிற்குச் சென்று Insta-வில் story வைத்து ஒப்பாரி வைத்த ஆபாசநிதியே!

“சினிமாவில் என்னை நீங்கள் தான் அறிமுகப்படுத்த வேண்டும்” என்று யார் வீட்டு வாசலில் யார் watchman-ஆக நின்று காத்திருந்தார் என்ற அழியா வரலாற்றை மக்கள் மறக்கவில்லை, டம்மிநிதி! Prepare well next time, ஓட்டநிதி!

ஓடுவதற்கல்ல… பதறாமல், கதறாமல், உண்மைகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதற்கு!

இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

நேற்று முதலமைச்சரின் பதிலுரைக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை என்று கூறினார். தவெக-வினரும், திமுக-வினரும் இணையத்தில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அழகல்ல:

தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திலே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை பதறல் நிதி, ஆபாசநிதி, ஓட்ட நிதி என்று மிக கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளனர். திமுக-வினரும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுபோன்ற கடுமையான விமர்சனங்கள் தொடர்வது ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு அழகல்ல என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Post

image 6

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா?

Posted by - மார்ச் 12, 2026 0
கேஸ் சிலிண்டரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவுடன் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என…

“எனக்கு ரொம்ப வருத்தம்; மய்யத்தில் நான் காம்சோர்” – கமல் கட்சியில் விலகும் முக்கிய நடிகை!

Posted by - ஜனவரி 30, 2025 0
ஹிந்தியில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதை நான் சொல்லிப்பல பேரைத் திட்டியிருக்கிறேன். காம்சோர் என்பதுதான் அந்த வார்த்தை. மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்…

CM Vijay: நெருங்கும் இடைத்தேர்தல்; தாராபுரத்தில் இன்று விஜய் பரப்புரை…! என்ன பேசப்போகிறார் முதலமைச்சர்?

Posted by - செப்டம்பர் 30, 2026 0
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக விஜய் இன்று பரப்புரையில் ஈடுபடுகிறார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு…

அவர் வருவாரா.? எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமி.. பலிக்குமா கணக்கு.?

Posted by - ஏப்ரல் 15, 2025 0
அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்த ஒருவரை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் அந்த கூட்டணி. அந்த அவர் சிக்குவாரா.? அதிமுக கணக்கு…
Gemini Generated Image gzfucmgzfucmgzfu

மிரட்டி விட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி.

Posted by - ஏப்ரல் 9, 2026 0
மதுரை சித்திரை திருவிழாவுக்கு அழகரைப் பார்க்க கூடும் கூட்டம் போல மக்கள் அலை திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜயை காண கூடியிருந்த காட்சி தமிழக அரசியல் களத்தை அலற…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன