dmdk

திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்

134 0

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நடுநிலையாகத்தான் செயல்படுகிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது ஜேசிடி பிரபாகரின் செயல்பாடுகள் ஆகும்.

சபாநாயகரின் செயல்பாடு:

முதன்முறை சபாநாயகராக பொறுப்பேற்ற ஜேசிடி பிரபாகர் இந்த அவையை எப்படி நடத்தப்போகிறார்? என்று பலரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அவரது செயல்பாட்டிற்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்த நிலையில், நேற்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதிலுரை குறித்து திமுக-வினர் பேசுவதற்கு அனுமதி அளிக்காததற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

நடுநிலையான செயல்பாடு:

இந்த சூழலில், திமுக கூட்டணி கட்சித் தலைவரும், விருத்தாச்சலம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ-வுமான பிரேமலதா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, என்னைப் பொறுத்தவரை பேரவைத் தலைவர் நடுநிலையாகத்தான் செயல்படுகிறார். நாம் அப்படி இல்லை என்று சொல்லிவிட முடியாது.

அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கிறார். அனைவரையும் அனுசரித்துச் செல்கிறார். அவரால் முடிந்தவரை அனைவருக்கும் அவர் சம வாய்ப்பை வழங்குகிறார். வாய்ப்பு கொடுக்கவில்லை என்று சொல்ல முடியாது. அதிகபட்சமாக அவர் பேசியது என்னவென்றால் அமருங்கள், எல்லோரும் அமருங்கள் என்று சொல்லிக்கொண்டேதான் இருப்பார். அவர் நடுநிலையாக செயல்பட்டிருக்கிறார்.

திமுக கேட்கவில்லை:

நேற்று நடந்த விஷயம் அவர் பல முறை அவர் சொன்னார். அனைவரும் இருக்கையில் சென்று அமருங்கள். நான் சொல்கிறேன் என்றார். அவர்கள் கேட்காதபோது அவர் வேறு வழியில்லாமல்தான் வெளியில் அனுப்பினார். பேரவைத் தலைவர் முதலில் எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு தருகிறேன் என்றார். அதன்பின்பு இல்லை என்று மறுத்துவிட்டார். ஏன் இல்லை என்று சொன்னார் என்று பேரவைத் தலைவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டணிக்கு எதிரான பிரேமலதாவின் பேச்சு:

பிரேமலதா விஜயகாந்த் கடந்த தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டார். தேமுதிக போட்டியிட்ட 10 தொகுதிகளில் 1 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போதே மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி மீது பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் குற்றச்சாட்டுதான் என்று மு.க.ஸ்டாலின் இருந்த மேடையிலே பேசியிருப்பார். அப்போது, பிரேமலதாவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை உண்டாக்கியது.

தற்போதும், கூட்டணி கட்சியான திமுக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை விமர்சித்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் சபாநாயகருக்கு ஆதரவாக பேசியுள்ளார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரவையில் உதயநிதியே பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Related Post

‘காங்கிரஸ் – த.வெ.க கூட்டணிக்கு அச்சாரம்’ ராகுலை சந்திக்கும் விஜய்..?

Posted by - ஜூலை 21, 2025 0
’விக்கிரவாண்டியில் நடைபெற்ற விஜயின் முதல் மாநாட்டிலேயே ராகுல்காந்தியை பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன’ அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த கட்சி, அந்த கட்சியோடுதான்…
fgdf

2026 தமிழ்நாடு அரசியல் ‘திக் திக்’: தவெக எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு ராஜினாமா? தளபதியை தடுக்க கைகோர்க்கும் திமுக – அதிமுக!

Posted by - மே 8, 2026 0
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழகமே பரபரப்பின் உச்சியில் இருக்கும் நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவல்கள் ரசிகர்களையும் மக்களையும் ஒரே நேரத்தில் குழப்பத்திலும்,…

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

Posted by - ஆகஸ்ட் 18, 2025 0
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாதக பொதுக் கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. செஞ்சிக்கோட்டையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட கோட்டை…

எங்களைத் தாண்டி தொடுங்க.. விஜய்க்காக களமிறங்கப்போகும் அதிமுக! எடப்பாடி போடும் ஸ்கெட்ச்

Posted by - அக்டோபர் 6, 2025 0
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை காவல்துறையினர் கைது செய்தால் அவருக்காக அதிமுக போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ளது.…
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

DMK TVK: ”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா நாங்கள்? மூக்குடைந்தும் திருந்தாத திமுக” – இறங்கி அடிக்கும் TVK

Posted by - ஜூன் 18, 2026 0
DMK TVK: திமுகவினரை போன்று அரசு சொத்துகளை கொள்ளையடித்து, பொய்களை கண்மூடித்தனமாக பரப்பமாட்டோம் என தவெகவினர் கடுமையாக பதிலடி தந்து வருகின்றனர். DMK TVK: முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன