udhayanidhi stalin cm attack news

உதயநிதி ஸ்டாலின் தாக்கு: முதல்வருக்கு துணிச்சல் இல்லை | Pixel Tamil

45 0

முதல்வர் மீது உதயநிதி கடும் தாக்கு: “தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை”கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், கோரிக்கை வைக்க வந்தவரைத் தாக்கியதாகக் கூறப்படும் துணை சபாநாயகர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என சுட்டிக்காட்டினார். “இது ஆட்சியா, அல்லது தவெக-வினர் அத்துமீற அமைக்கப்பட்ட கூட்டமைப்பா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சொந்தக் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் முதல்வருக்கு இல்லை என விமர்சித்த உதயநிதி, இந்தப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம், எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனைக் கூட்டம் என அவசரமாக நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஆவேசமாகப் பேசியதாக ஆன்லைன் குழுக்கள் மூலம் ரீல்ஸ் பரப்பினால் மக்கள் இந்த விவகாரங்களை மறந்துவிடமாட்டார்கள் என்றும் அவர் கூறினார். மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் கட்சியினரை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் மக்கள் அதற்குப் பதில் சொல்வார்கள் என்றும் எச்சரித்தார்.

MURUGAN

முருகன் – PixelTamil.com செய்தி ஆசிரியர். தமிழ்நாடு, இந்தியா, உலகம், அரசியல் மற்றும் சினிமா தொடர்பான செய்திகளைத் துல்லியமாகவும் விரைவாகவும் வழங்குகிறார்.

Related Post

தவெக மேடையில் ஒலித்த PTR பெயர் – ஊழலை பற்றி பேசியதால் ஓரங்கட்டப்பட்டதாக ஆதவ் பரபர பேச்சு

Posted by - ஆகஸ்ட் 21, 2025 0
#TVK | #TVKVijay |#VijaySpeech|#TVKMaduraiMaanadu | #TamilagaVettrikazhagam | #Vijay | #TVKLeader | #TVKMaanadu | #MaduraiTVKMaanadu | #TVKFlag | #தமிழகவெற்றிக்கழகம் | #TVKMaduraiMaanaduUpdateWithpixelmedia…
vijay dmk

”பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்துக்கு பாடம் புகட்டும்” தவெகவுக்கு சவால்விட்ட சேகர்பாபு!

Posted by - மார்ச் 20, 2026 0
பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆற்றல்மிக்க தலைவவரை விமர்சிப்பவர்களை, தன் தாயே தடுத்தாலும் திமுக தொண்டன் எதிர்ப்பான். பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்- சேகர்பாபு…

கருணாநிதி, ஸ்டாலினையே விஞ்சிய உதயநிதி! – எம்.எல்.ஏவாகி 19 மாதங்களில் அமைச்சர்!

Posted by - டிசம்பர் 13, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 17 ஆண்டுகள் கழித்து 2006ல் தான் முதன்முறையாக அமைச்சரானார். சட்டமன்ற உறுப்பினரான 19 மாதங்களில் தமிழ்நாடு அமைச்சரவையில் அங்கம் வகிக்கப்போகிறார்…

விஜய்க்கு எதிராக அஜித்! திமுக. அதிமுக, பாஜக போடும் ஸ்கெட்ச்! தவெக-வை வீழ்த்த ப்ளான்

Posted by - ஜனவரி 28, 2025 0
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்க்கு எதிராக அஜித்தைப் பயன்படுத்த அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றனர். தமிழக அரசியல் களம் 2026ம் ஆண்டு…
araja

A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா

Posted by - ஜூன் 3, 2026 0
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணை பொதுச் செயலாளரும், எம்பி-யுமான ஆ. ராசா, முதலமைச்சர் விஜய்யை கேள்விளால் துளைத்து எடுத்துள்ளார். அவர் என்ன பேசினார்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன