DMK 2

MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?

50 0

தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசனை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது விஜய் தலைமையிலான தவெக அரசு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. ஆளுங்கட்சியாக இருந்த நிலையில், எதிர்க்கட்சியாக மாறியது மட்டுமின்றி கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலினே தோற்றது திமுக-வினர் மத்தியில் ஆதங்கத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியது.

ஆட்சியைக் கவிழ்க்க பேரம்:

தவெக அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களை திமுக முன்வைத்து வரும் சூழலில், தவெக அரசை கவிழ்ப்பதற்காக அந்த கட்சியின் எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் பின்னணியில் செந்தில் பாலாஜி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. செந்தில் பாலாஜியின் சகோதரர் இந்த வழக்கில் முன்ஜாமின் கோரியதுடன் தலைமறைவாகவும் உள்ளார்.

கோபத்தின் உச்சியில் மு.க.ஸ்டாலின்:

இந்த விவகாரம் குறித்து அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த கோபம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால், தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த முயற்சி குறித்து அவருக்கே தெரியாமல் காய் நகர்த்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகன், மருமகனுக்கு வார்னிங்:

இதனால், தனது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் உள்ளிட்ட மிக மிக நெருக்கமானவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனையில் இந்த சம்பவத்தால் அவர் மிக கோபத்துடன் அவர்களை எச்சரித்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியையே கவிழ்க்க விரும்பாத தான், நேர்வழியிலே ஆட்சியைப் பிடிக்க விரும்புவதாகவும், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவதும், தவெக ஆட்சியை கவிழ்ப்பதும் திமுக-வின் வேலை இல்லை என்றும் திட்டவட்டமாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் லண்டனில் இருந்து திரும்பும் வரை தனக்குத் தெரியாமல் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என்றும் அங்கிருந்த அனைவரையும் எச்சரித்துள்ளார்.

அதிருப்தி:

திமுக – அதிமுக கூட்டணி முயற்சி விவகாரத்தில் தொடக்கம் முதலே மு.க.ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லாத சூழலில், அப்போது எடுக்கப்பட்ட முயற்சி வெளிவந்ததன் பின்னணியில் திமுக-விற்கு மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கியது. அந்த விவகாரத்திலும் தனக்கு நெருக்கமான சிலர் மீது மு.க.ஸ்டாலின் ஆதங்கத்தில் உள்ளார்.

தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்கு 180 கோடி ரூபாய் அளவிற்கு பேரம் பேச சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தற்போதைய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை. மேலும், தனது மகன் மற்றும் மருமகனுடன் நடத்திய ஆலோசனையில் யாருடைய அறிவுறுத்தலில் சில முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்பதையும் தான் அறிவேன் என்றும், இதுபோன்ற விபரீத முயற்சிகள் இனிமேல் இருக்கவே கூடாது என்றும் எச்சரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post

fb

மே 4ஆம் தேதி வாக்குகள் இப்படித்தான் எண்ணப்படும்.! தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Posted by - April 27, 2026 0
Tamil Nadu Assembly election vote counting : காலை 8:00 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், 30…
Generated Image November 13 2025 10 11AM

சிறுத்தைகளுக்காக சீறிய பொன்முடி! – மீண்டும் புகைய ஆரம்பிக்கும் விழுப்புரம் திமுக விவகாரம்

Posted by - November 13, 2025 0
தேர்​தல் சமயத்​தில் தேவையற்ற மனக்​கசப்​பு​கள் வேண்​டாம் என்​ப​தற்​காகவே முன்​னாள் அமைச்​சர் பொன்​முடியை மீண்​டும் துணைப் பொதுச்​செய​லா​ள​ராக்​கி​னார் ஸ்டா​லின். ஆனால், பொன்​முடிக்​கும் விழுப்​புரம் மத்​திய மாவட்ட திமுக செய​லா​ள​ரான…
Generated Image January 13 2026 8 16PM

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

Posted by - January 13, 2026 0
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வழங்க வேண்டும் என்று சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்!-ஆதவ் அர்ஜுனா த.வெ.க .

Posted by - July 18, 2025 0
அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்! #Aadhavarjuna #TVK #Teachers_Protest #Tamilnadu_CM #pixeltv  #TamilNews #pixelmedia           குற்றவாளிகளைப் போல…

முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை… எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

Posted by - August 27, 2025 0
முதலமைச்சராக பொறுப்பேற்பேன் என்று நான் ஒரு முறை கூட கருதியதில்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக-வின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *