அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

216 0

சென்னை:

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். நடப்பாண்டு மாணவர்கள் பழைய தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என்றும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் மாணவர்களிடம் திருப்பி அளிக்கப்படும் என்றும் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணங்கள் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு தாளுக்குத் தேர்வுக் கட்டணம் 150 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு 300 ரூபாய் தேர்வுக் கட்டணம் இருந்த நிலையில் தற்போது 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. துணைவேந்தர்  வேல்ராஜ் அறிவிப்பு | Anna University VC Velraj Press Meet about Anna  University exam ...

முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுக் கட்டணம் 450 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை மாணவர்களுக்கான ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்புக்குத் தேர்வுக் கட்டணம் 600 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித்தலைவர்களும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் பொன்முடி, இந்த செமஸ்டர் தேர்வில் இந்த கட்டண உயர்வு இருக்காது. பழைய கட்டணமே இருக்கும்’ என்று கூறினார். இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவின் பேரில் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த செமஸ்டரில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அமல்படுத்த அமைச்சர் அறிவுறுத்தினார் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நடப்பாண்டு மாணவர்கள் பழைய தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என்றும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் மாணவர்களிடம் திருப்பி அளிக்கப்படும். அமைச்சர் உத்தரவு தொடர்பாக சிண்டிகேட் உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்படும். பொதுவாக கட்டணத்தை 100% உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் 9 ஆண்டுகளுக்குப் பின் 50% மட்டுமே உயர்த்தியுள்ளோம்’ எனவும் வேல்ராஜ் தெரிவித்தார்.

தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவம் மாணவ, மாணவிகளிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அடுத்த செமஸ்டரில் உயர்த்தப்பட்ட கட்டணம் கட்ட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

இந்த ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

Posted by - January 27, 2024 0
சிவகங்கை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு, வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

அனிருத் முதல் மணிகண்டன் வரை! கலைமாமணி விருதுகள் 2021-2023 யார் யாருக்கு விருதுகள்?

Posted by - September 24, 2025 0
 கடந்த மூன்று ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்பொது 2021, 2022, 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள் …. 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான…

உரையை வாசிக்காமலேயே வெளியேறிய ஆளுநர் – சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

Posted by - January 6, 2025 0
ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களிடம், ”தேசிய கீதம் இசைக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்யக்கூடாது. அமைதியாக இருங்கள்” என்று…

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய பிச்சைக்காரர்- நாமக்கல் கலெக்டரிடம் வழங்கினார்

Posted by - February 20, 2023 0
நாமக்கல்: நாமக்கல் பிச்சையெடுப்பவர்கள், ‘ஐயா தர்மபிரபு ஏதாவது தர்மம் பண்ணுங்க’ என்று யாசகம் பெறுவது வழக்கம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் தனக்கு கிடைத்த பணத்தை…

எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு.. மோசமாக பேசிய ஜனனிக்கு ரச்சிதாவின் கணவர் பதிலடி

Posted by - November 30, 2022 0
ரச்சிதாவை விமர்சித்த ஜனனி விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ரச்சிதா பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் இதற்கு முன்பு சீரியல்களில் நடிக்கும் போது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *