அண்ணாமலைக்கு அடித்த ஜாக்பாட்.. திறமையை பாராட்டிய தலைமை.. தேசிய அளவில் பொறுப்பு…

195 0

பாஜக தமிழ்நாடு தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு, தேசிய அளவில் பொறுப்பு கிடைக்க உள்ளது. அவரது திறமையை பாராட்டியுள்ள தலைமை, இந்த தகவலை தெரிவித்துள்ளது.

பாஜக தமிழ்நாடு தலைவர் யார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது. இந்நிலையில், ஏற்கனவே தலைவராக இருந்த அண்ணாமலை என்ன ஆவார் என்ற கேள்விக்கும் தற்போது விடை கிடைத்துள்ளது. அவரது நிர்வாகத் திறமையை பாராட்டி, அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக வளர முக்கிய பங்காற்றிய அண்ணாமலை

பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை ஐபிஎஸ், 2019-ல் பெங்களூரு தெற்கு காவல்துறை இணை ஆணையராக பணியாற்றியபோது, அந்த பணியை துறந்துவிட்டு பாஜகவில் இணைந்தார். விவசாயத்தில் ஆர்வம் காட்டிய அண்ணாமலை, ஐஏஎஸ் பயிற்சி மையத்தையும் தொடங்கினார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது, போதைப் பொருளுக்கு எதிராகவும், சட்டவிரோத மதுபானக் கடைகளை மூடியும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பின்னர் பாஜகவில் இணைந்து முழுநேர அரசியல்வாதியாக செயல்படத் தொடங்கிய அண்ணாமலை, 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், பாஜக தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டார்.

மேடைப் பேச்சுகளில் அதிரடி காட்டும் அண்ணாமலை, சில சமயங்களில் சர்ச்சைகளிலும் சிக்கியதுண்டு. புள்ளி விவரங்களுடன் கூடிய அவரது பேச்சுக்கள் மூலம் தமிழ்நாட்டில் பாஜகவை மக்கள் திரும்பிப் பார்க்கச் செய்தார். அதோடு, என் மண் என் மக்கள் என் பாதயாத்திரை மூலம், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேலும் பிரபலமடைந்தார். அவரோடு பாஜக-வையும் பிரபலமடையச் செய்தார். அவரது நிர்வாகத் திறமையும் பாராட்டு பெற்றது.

தமிழ்நாடு தலைவர் பதவியிலிருந்து விடுவிப்பு – தேசிய அளவில் பொறுப்பு

பாஜக தமிழ்நாடு தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் அவரே தலைவராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உடனான மோதல் போக்கு காரணமாக, கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், தற்போது அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்துவந்தது. இந்நிலையில், புதிய தலைவர் குறித்தும், அண்ணாமலை குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அமித் ஷா. அதில், மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து வேட்புமனு பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளை புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் அரசியல் மற்றும் திட்டங்களை கிராமம் கிராமமாக மக்களிடம் எடுத்துச் சென்றதில், அவரது பணிக்கு ஈடு இணை இல்லை என பாராட்டியுள்ளார். அண்ணாமலையின் நிர்வாகத் திறனை தேசிய அளவில் பாஜக பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம், அண்ணாமலைக்கு தேசிய அளவில் பாஜகவில் பொறுப்பு வழங்கப்படும் என தெளிவாகிறது. அது என்ன பதவி என்பது விரைவில் தெரியவரும்.

Related Post

அடுத்த ரவுண்டுக்கு ரெடியா.. புயல்? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழை கன்ஃபார்ம்

Posted by - October 22, 2025 0
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமான வலுவடையக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வடமாவட்டங்களில்…

“வாக்குறுதி எண் 311… ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோருவோர் மீது ஒடுக்குமுறையா?

Posted by - December 31, 2025 0
சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதி​யம்’ கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அரையாண்டுத் தேர்வு…

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? இந்த 6 பழமும் நீரிழிவு நோயாளி சாப்பிடலாம்.. என்ன பாருங்க

Posted by - December 2, 2023 0
சென்னை: சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கள், பழங்கள், பருப்புகள் என்னென்ன தெரியுமா? எந்தெந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்? ஆரஞ்சு பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?…

திமுக அரசை கண்டித்து போராட்டத்தை அறிவித்தது அதிமுக..!!

Posted by - March 9, 2024 0
போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ள்ளது. இதுகுறித்து அதிமுக…

Smallpox Prevention : பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?

Posted by - March 2, 2026 0
தமிழகத்தில் பரவும் சின்னம்மை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து, பனியின் தாக்கம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *