ஆயுத பூஜையில் குறைந்த வேட்டையன் வசூல்.. 2வது நாள் கலெக்சன் ரிப்போர்ட்

213 0

ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் படம் கடந்த அக்டோபர் 10 தியேட்டரில் வெளியாகி இருந்தது. பொதுவாகவே பண்டிகை நாட்களை குறி வைத்ததால் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும். அதேபோல் தொடர் விடுமுறையை கணக்கிட்டு இந்த படமும் ரிலீஸ் ஆகி இருந்தது.

நேற்றைய தினம் ஆயுத பூஜை என்பதால் மக்கள் கூட்டம் குடும்பத்தோடு தலைவர் படத்தை பார்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் நாளை விட மிகக் குறைந்த வசூலையே இரண்டாவது நாளில் வேட்டையன் படம் பெற்றிருக்கிறது.

டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரஜினி, அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் மற்றும் ரித்திகா சிங் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். அனைவரது நடிப்பையுமே பாராட்டும் அளவுக்கு அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர்.

வேட்டையன் இரண்டாவது நாள் கலெக்ஷன்

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்திருந்தார். ஆனால் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றிருந்தது. இந்த சூழலில் முதல் நாளில் 31.7 கோடி இந்தியா முழுவதும் வேட்டையன் படம் வசூல் செய்திருந்தது.

நேற்று தமிழகத்தில் மட்டும் 21.35 கோடி வசூலை பெற்றது. தெலுங்கில் 2 கோடியும், பாலிவுட்டில் 0.4 கோடியும், கன்னடத்தில் 0.5 கோடியும் வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக இதுவரை இந்தியா முழுவதும் வேட்டையன் படம் 55.5 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

வேட்டையன் படம் கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களில் 50 கோடியை தாண்டி இருக்கிறது. இன்னும் சில நாட்களில் போட்ட பட்ஜெட்டை லைக்கா எடுத்துவிடும். ஆனால் எதிர்பார்த்த லாபம் கிடைப்பது சந்தேகம்தான்.

Related Post

இன்னும் உங்க சாங் இளமையா இருக்கு.. எனக்கு தான் வயசு ஆயிடுச்சு.. நடிகர் சிவகார்த்திகேயன்

Posted by - June 2, 2023 0
‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட…

மீண்டும் ரஞ்சிதமே பாடல்.. வைரலாக்கும் ரசிகர்கள் …

Posted by - November 30, 2022 0
விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில்…

கில்லி ரிலீஸின் போது தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான்.. உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்

Posted by - September 18, 2025 0
கில்லி இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் கில்லிவிஜய்யின் திரை வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனையாக கில்லி திரைப்படம் அமைந்தது. இன்று…

லண்டனில் நடைபெறும் பின்னணி இசை.. பொன்னியின் செல்வன்-2 படத்தில் தீவரம் காட்டும் படக்குழு

Posted by - March 21, 2023 0
மணிரத்னம் இயக்கத்தில் தயாரான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள்…

Intro உருவாக்கிக் கொடுத்து, வீழ்ந்து கிடந்த அரவிந்த்சாமிக்கு Come Back கொடுத்தது யார் தெரியுமா?

Posted by - December 18, 2024 0
ரஜினியின் தளபதி படம் மூலம் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அப்படத்தில் கலெக்டர் வேடத்திலும் அவருக்கு தம்பியாகவும் நடித்திருந்தார். அதன் பின், மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதில், மதுபாலா,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *