இந்த ஆண்டில் 4 கிரகண நிகழ்வுகள்… இந்தியாவில் காண முடியுமா?

233 0

இந்தூர்:

சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. அதன்படி சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணமும், சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும்போது சந்திர கிரகணமும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் முழு சூரிய கிரகணம் உள்பட 4 கிரகணங்கள் நிகழும் என்றும், ஆனால் அவை எதையும் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்றும் மத்தியபிரதேசத்தை சேர்ந்த வானியல் நிபுணர் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டு கிரகணங்கள் நிகழ்வு குறித்து உஜ்ஜைன் நகரில் உள்ள அரசு ஜிவாஜி ஆய்வகத்தின் மூத்த அதிகாரி ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறியதாவது:-இந்த ஆண்டில் 4 கிரகண நிகழ்வுகள்... இந்தியாவில் காண முடியுமா? | 4 eclipse  events this year
2024-ம் ஆண்டின் கிரகண நிகழ்வுகள், மார்ச் 25-ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணத்துடன் தொடங்குகிறது. இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. அதனை தொடர்ந்து, முழு சூரிய கிரகணம் ஏப்ரல் 8 மற்றும் 9-ந்தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழ உள்ளதால், இந்த கிரகணத்தையும் இந்தியாவில் பார்க்க இயலாது. அதேபோல் செப்டம்பர் 18-ந்தேதி காலை நிகழும் பகுதி சந்திர கிரகணமும் இந்தியாவில் காணப்படாது. அக்டோபர் 2 மற்றும் 3-ந்தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழவுள்ள வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் புலப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பது எப்படி? இது நல்ல ஐடியாவா இருக்கே..!

Posted by - December 13, 2024 0
புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என விரும்புபவர்கள் தற்போது மக்களுக்கு எதற்கான தேவை அதிகரித்திருக்கிறது என்பதை பொறுத்து தொழிலை அமைத்தால் எளிதாக அதில் வெற்றி பெற முடியும்.…

590 கோடி மோசடி: IDFC First Bank பங்கு 20% சரிவு – முதலீட்டாளர்களுக்கு ₹14,000 கோடி இழப்பு!

Posted by - February 25, 2026 0
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான IDFC First Bank பெரிய மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ளது. வங்கியின் சண்டிகர் கிளையில் நடந்ததாக கூறப்படும் ₹590 கோடி முறைகேடு…

நைஜர் நாட்டில் இருந்து இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள் – மத்திய அரசு வேண்டுகோள்

Posted by - August 12, 2023 0
புதுடெல்லி: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டார். இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா…

2018-ல் இருந்து வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்: மத்திய அரசு தகவல்

Posted by - December 8, 2023 0
இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியபோதுதான், இந்திய மாணவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் படித்து வருகிறார்களா? என்பது தெரிய…

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

Posted by - August 21, 2023 0
புதுடெல்லி: தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாள் போராட்டத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *