Gemini Generated Image e239sme239sme239

இன்று தமிழ் புத்தாண்டு! உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்!

119 0

தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது தமிழ் புத்தாண்டு. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு சித்திரை மாத முதல் நாள் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத முதல் நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி பிறக்கும். இந்த நாளை தமிழ் புத்தாண்டாக தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர்.

இன்று தமிழ் புத்தாண்டு:

இதன்படி, இன்று தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் மக்கள் காலை முதலே உற்சாகமாக காணப்படுகின்றனர். அதிகாலையிலே எழுந்து குளித்து அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டை பாரம்பரியமாக தமிழர்கள் கொண்டாடி வருவதால், இந்த நாளில் காலையிலே தங்கள் வீட்டின் முன்பு வாசல் தெளித்து  கோலமிட்டு அலங்கரித்துள்ளனர். மேலும், செல்போன் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒருவருக்கு ஒருவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கோயில்களில் சிறப்பு வழிபாடு:

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கூட்டம் காலை முதலே குவிந்து வருகிறது. தமிழ் புத்தாண்டுடன் சேர்ந்து செவ்வாய் கிழமை என்பதால் பக்தர்கள் அதிகளவு கோயில்களில் குவிந்து வருகின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அதிகளவு பக்தர்கள் வரும் கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சிவாலயங்களிலும், முருகப்பெருமான் கோயில்களிலும், வைணவத் தலங்களிலும், அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் அதிகளவு காலை முதல் காணப்பட்டு வருகின்றனர்.

வேட்பாளர்கள் சாமி தரிசனம்:

தற்போது தமிழ்நாட்டில் அரசியல் பரப்புரையில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், தமிழ் புத்தாண்டு என்பதால் பல வேட்பாளர்களும் காலையிலே கோயில்களில் சென்று சாமி தரிசனம் செய்து அங்கிருந்து தங்களது பரப்புரையைத் தொடங்கி வருகின்றனர். தமிழ் புத்தாண்டை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Related Post

தவெக மாநாடு : விக்கிரவாண்டியில் குவியும் தொண்டர்கள்… இத்தனை சிறப்பு ஏற்பாடுகளா?

Posted by - October 27, 2024 0
தவெக மாநாட்டிற்கு வருபவர்களின் மொபைல் சிக்னல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் 150 மருத்துவர்கள் உட்பட 350 பேர் அடங்கிய மருத்துவக்…

எனக்கு கர்வம் வராமல் வேற எவனுக்குடா வரும்…ஆவேசமாக பேசிய இளையராஜா

Posted by - February 2, 2025 0
யாரும் செய்யாத சாதனைகளை எல்லாம் செய்துகொண்டிருக்கும் எனக்கு கர்வம் இல்லையென்றால் வேறு யாருக்கு வரனும் என்று இளையராஜா கேள்வி எழுப்பியுள்ளார் இளையராஜ உலகளவில் இசைத்துறையின் மாபெரும் ஆளுமையாக…

இனிமே அதெல்லாம் நடக்காது.. நடக்கவிடப்போறது இல்ல.. அடித்துப் பேசிய தவெக தலைவர் விஜய்!

Posted by - April 26, 2025 0
இதற்கு முன்பு பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்திருக்கலாம். இனிமேல் அதுபோல நடக்காது என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முகவர்கள் கருத்தரங்க கூட்டம்…

ராகுகாலம்: அதன் பலன்கள் & நாள் வாரியாக நேரம்…

Posted by - December 11, 2025 0
#Rahukalam #RahukalamToday #TamilNews #TamilAstrology#TamilUpdates #AstrologyTamil #TodayRahukalam #TamilDailyNews ராகுகாலம் என்பது ஒவ்வொரு நாளும் ஓர் நிரந்தரமான நேரத்தில் வரும் அசுப காலம். இந்த நேரத்தில் புதிய…

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு 1 மணிக்கு மேல் தடை – காவல்துறை

Posted by - December 28, 2022 0
வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது என தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.12.2022 அன்று மாலை பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *