இன்றுடன் விடைபெறும் 2022.. புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

206 0

New Year 2023: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்

2022 ஆம் ஆண்டு இன்றுடன் விடை பெறும் நிலையில், புத்தாண்டை கொண்டாட மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். கொரோனா பரவல் சற்றே அதிகரிக்கும் நிலையில் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை மாநகரில் பாதுகாப்புக்காக 16 ஆயிரம் காவலர்களும், ஆயிரத்து 500 ஊர்காவல் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னை மெரினாவில் மணல் பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி என கூறியுள்ள நிலையில் இரவிலும் ட்ரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளது.

நட்சத்திர விடுதிகளில் ஆபாச நடனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்களை மூடவும், மதுகூடங்களை அனுமதித்த இடங்களில் மட்டுமே நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனத்தை இயக்குவோரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் சாலைகளில் பல இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. வாகன ஓட்டிகள் கவனிக்கும் வகையில் அவைகளில் ஒளிரூட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான ரிசார்ட்டுகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் உள்ள நிலையில் வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது, அதிக ஒளி உமிழும் விளக்குகளை உபயோகிக்கக்கூடாது. மேலும்,

Camp Fire பயன்படுத்த கூடாது, வனப்பகுதிக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல மாநிலம் முழுவதும் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Post

2026-ல் கப்பு முக்கியம் பிகிலு.. அரசியல் என்ட்ரி பற்றி மறைமுகமாக சொன்னாரா விஜய்?

Posted by - November 2, 2023 0
லியோ விஜய் அரசியலுகு வர போகிறார் என நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் செய்து…

கடலூரில் “அந்தரத்தில்” தொங்குச்சாமே.. மிட்நைட்டில் ஊசலாடிய 40 உயிர்கள்.. கண்விழித்து பார்த்தால்???

Posted by - September 26, 2023 0
கடலூர்: அரசு பஸ் ஒன்று அந்தரத்தில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து, கடலூரே அதிர்ந்து போய்விட்டது.. என்ன நடந்தது நள்ளிரவில்? சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு விரைவு…

“இங்கு பாம்புதான் அரசியல்… ஆனால் நான் பயப்படமாட்டேன்..” – தவெக மாநாட்டில் விஜய் சொன்ன காரணம்!

Posted by - October 28, 2024 0
அரசியல்ல நாம குழந்தைதான் என்பது மத்தவங்களோட கமெண்ட். ஆனா பாம்பாக இருந்தாலும் பயம் இல்ல என்பதுதான் நம்மளோட கான்ஃபிடன்ட். “இங்கு பாம்பு தான் அரசியல் என்றும் அதை…

ஜெயலலிதாவின் விசுவாசி.. பால் பிசினஸில் கொடி கட்டி பறந்த நயினார்.. யார் இந்த திருநெல்வேலிக்காரர்? Nainar Nagenthran to be 13th Tamil Nadu BJP president….

Posted by - April 11, 2025 0
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எட்டே ஆண்டுகளில் அதன் மாநில தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்த…

நவீன கால நாட்டாமைகள்…! நடவடிக்கை எடுக்குமா அரசு…?

Posted by - April 13, 2023 0
“இந்த குடும்பத்தோட யாரும் அன்னந்தண்ணி பொழங்ககூடாது” என நாட்டாமை படத்தில்  நடிகர் விஜயகுமார் பேசும் சினிமா நாம் அனைவரும் அறிந்ததே.இந்த காலத்திலும் இப்படி ஊரை விட்டு ஒதுக்கி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *