New Year 2023: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்
2022 ஆம் ஆண்டு இன்றுடன் விடை பெறும் நிலையில், புத்தாண்டை கொண்டாட மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். கொரோனா பரவல் சற்றே அதிகரிக்கும் நிலையில் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை மாநகரில் பாதுகாப்புக்காக 16 ஆயிரம் காவலர்களும், ஆயிரத்து 500 ஊர்காவல் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னை மெரினாவில் மணல் பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி என கூறியுள்ள நிலையில் இரவிலும் ட்ரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளது.
நட்சத்திர விடுதிகளில் ஆபாச நடனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்களை மூடவும், மதுகூடங்களை அனுமதித்த இடங்களில் மட்டுமே நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனத்தை இயக்குவோரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் சாலைகளில் பல இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. வாகன ஓட்டிகள் கவனிக்கும் வகையில் அவைகளில் ஒளிரூட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான ரிசார்ட்டுகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் உள்ள நிலையில் வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது, அதிக ஒளி உமிழும் விளக்குகளை உபயோகிக்கக்கூடாது. மேலும்,
Camp Fire பயன்படுத்த கூடாது, வனப்பகுதிக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல மாநிலம் முழுவதும் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Related Post
மன்சூர் அலிகானிடம் விரைவில் விசாரணை: சம்மன் அனுப்பி அழைக்க இருப்பதாக போலீசார் தகவல்
சென்னை: நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில்…
மன்னார் வளைகுடா கடலில் சூறைக்காற்று: ராமேசுவரத்தில் 50 மீட்டர் உள்வாங்கிய கடல்
ராமேசுவரம்: தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன்…
அரசியலிலும் சாதிக்க வேண்டுமென விஜய்க்கு மாணவி அழைப்பு…
#BREAKING | மேடையிலேயே விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்த மாணவி மாணவியின் அழைப்பை கடைசி வரை கவனமுடன் கேட்டுக்கொண்ட விஜய் சென்னை, நீலாங்கரையில் மாணவ – மாணவிகளுக்கு…
மாணவிகள், இளம்பெண்களை நிர்வாணமாக நிற்கவைத்து வீடியோ பதிவு செய்த பாதிரியார்! விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை அடுத்த பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ. இவர் அழகிய மண்டபம் பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். கடந்த…
தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.…
Categories
- Sports (85)
- TN Political Zone (345)
- Trending Tamil (709)
- Viral Social (12)
- அரசியல் (222)
- இந்தியா (478)
- உலகம் (174)
- சினிமா (827)
- தமிழ்நாடு (1,134)
Recent Posts
- விஜயுடன் இணைந்து அரசியல் பயணம்’ அதிரடியாக அறிவித்த ராகவா லாரன்ஸ்

- Raghava Lawrence Politics: அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டது.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

- என் இனிய தமிழ் மக்களே… உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா!

- Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.!

- Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!
