உ.பி.யில் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழப்பு: அதிக வெப்பம் காரணமா?

361 0

உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் திடீரென அங்குள்ள மக்களுக்கு தீவிர காய்ச்சல், மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு படையெடுத்தனர்.

மருத்துவமனையில சிகிச்சை பலனளிக்காமல் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15-ந்தேதி 23 பேரும், 16-ந்தேதி 20 பேரும், நேற்று முன்தினம் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பநிலை 100 டிகிரியை தாண்டிய வண்ணம் உள்ளது. இதுதான் உயிரிழப்பிற்கு காரணம் என மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.உ.பி.யில் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழப்பு: அதிக வெப்பம் காரணமா? | 54 Dead In 72 Hours At UP Hospital

ஆனால், இதுகுறித்து விசாரணை நடத்த லக்னோவில் இருந்து சீனியர் டாக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, கடும் வெயில் காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் முதலில் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது அதிக வெயில் தாக்கத்திற்கான முதல் அறிகுறி இல்லை. தண்ணீர் தொடர்பான நோய் பாதிப்பாக இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது. லக்னோ குழுவில் இடம் பிடித்துள்ள சீனியர் டாக்டர் ஏ.கே. சிங் கூறுகையில் ”உயிரிழப்புகள் தண்ணீர் தொடர்பான நோயால் ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமாக ஏற்பட்டதா? என விசாரணை நடத்தப்படும். மேலும், அதிகாரிகள் தண்ணீர் மாதிரியை பரிசோதனை செய்ய வர இருக்கிறார்கள்” என்றார்.

பொதுமக்கள் உயிரிழப்புக்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், யோகி ஆதியநாத் ஆட்சியை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ”அரசின் கவனக்குறைவால் உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் பெரும்பாலான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதிக வெப்பம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கனும். கடந்த 6 வருடங்களில் ஒரு மாவட்ட மருத்துவமனை கூட கட்டப்படவில்லை. உயிரிழந்தவர்கள் மிகவும் ஏழை விவசாயிகள். அவர்கள் சரியான நேரத்தில் உணவு, மருந்துகள், சிகிச்சை பெற முடியாததுதான் அதற்கு காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Post

ஜார்க்கண்டில் 8 பஸ்கள் அடுத்தடுத்து எரிந்ததால் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கட்கர்கா பகுதியில் தனியார் பஸ் நிறுத்துமிடம் உள்ளது. தொலைதூரங்களுக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு வருகின்றன.…

கோவிலுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபரை கன்னத்தில் அறைந்த பக்தர்- பயங்கரவாத தடுப்பு ஒத்திகையில் பரபரப்பு

Posted by - August 9, 2023 0
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர்…

மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு

Posted by - September 28, 2023 0
இம்பால்: மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில…

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்

Posted by - August 11, 2023 0
திருவனந்தபுரம்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். தனது சகோதரி ஜெயந்தி மற்றும் நெருங்கிய…

திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததால் இரும்பு கம்பியால் தாக்கி டெல்லி மாணவி கொலை

Posted by - July 29, 2023 0
டெல்லியை சேர்ந்த இளம்பெண் நர்கிஸ் (25). இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்குள்ள கமலா நேரு கல்லூரியில் படிப்டை முடித்துள்ளார். பின்னர், மாளவியா நகரில் உள்ள ஸ்டெனோகிராஃபர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *