சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

246 0

சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய், சினிமாவை விட்டு விலக உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் விடாமுயற்சியால் முன்னேறிய நடிகர்களுள் நடிகர் விஜய்யும் ஒருவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் அவர் நடிக்கும் படங்கள் தற்போது பான் இந்தியா அளவில் ரிலீஸ் செய்யப்பட்டு பிற மாநிலங்களிலும் பட்டைய கிளப்பி வருகின்றன.

தற்போது நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. லியோ பட ஷூட்டிங் முடிந்ததும், அடுத்ததாக விஜய் நடிப்பில் தளபதி 68 திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார்.இப்படி ஷூட்டிங்கில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், மறுபுறம் அரசியல் பணிகளையும் சைலண்டாக செய்து வருகிறார் விஜய். அவரின் சமீபத்திய நகர்வுகள் அனைத்தும் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளன. குறிப்பாக நேற்று நடத்த பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவே அவரின் அரசியல் பிரவேசத்தின் பிள்ளையார் சுழி என சொல்லலாம்.

அந்த அளவுக்கு அந்த விழாவில் விஜய்யை புகழ்ந்து பேசிய பலரும் அவரின் அரசியல் வருகைக்காக காத்திருப்பதாக கூறினர். விஜய்யும் தன்னுடைய பேச்சில் லைட்டாக அரசியல் வருகைக்கு ஹிண்ட் கொடுத்திருந்தார். இதையெல்லாம் பார்க்கும் போது அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் அரசியலில் நுழையலாம் என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளதாகவும், அவர் அரசியல் கட்சி தொடங்கி அதற்காக வேலைகளை செய்ய உள்ளதால், வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள தளபதி 68 தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

தளபதி 68 படத்தில் நடித்து முடித்த பின்னர் அரசியல் வேலைகளை ஆரம்பிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அரசியலில் நுழைந்துவிட்டால் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவர் நடிப்பை நிறுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Related Post

நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் மரணம்

Posted by - December 8, 2022 0
நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார். ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சென்னை: தமிழ் திரைப்பட…

விடுதலை 2 திரைபார்வை..

Posted by - December 20, 2024 0
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால், மக்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பு இருக்கும். சமூக அக்கறை மற்றும் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை அழுத்தமாக பேசி வருகிறார்…

காதலை கண்டித்ததால் ஆத்திரம்- தம்பியை கொன்று 20 துண்டுகளாக வெட்டி ஏரியில் வீசிய அக்காள்

Posted by - March 21, 2023 0
ஓசூர்: கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் சிந்திகி தாலுகாவுக்கு பட்ட தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி. இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது.…

சிவாஜி ராவ் டூ சூப்பர் ஸ்டார்.. தமிழகம் கொண்டாடும் ரஜினிகாந்த்.. பிறந்தநாள் ஸ்பெஷல்!

Posted by - December 12, 2022 0
Rajinikanth Birth Day: ரஜினிகாந்த் கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழையும் அந்த முதல் காட்சி தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதின் திறவுகோலாகவும் அமைந்தது. 73 வது வயதில்…

இபிஎஸ்-க்கு வாழ்த்து கூறிய நடிகர் அஜித்..!

Posted by - March 30, 2023 0
நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று அஜித்திடம் இரங்கல் தெரிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் தொலைப்பேசி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *