உங்க வீட்டுல காய் நிறைய இருக்கா? அப்ப இப்படி வெஜ் மஞ்சூரியன் செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

197 0

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். உங்கள் வீட்டிலும் இப்படி கேட்பார்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ், கேரட் போன்ற காய்கறிகள் நிறைய உள்ளதா?

அப்படியானால் அந்த காய்கறிகளைக் கொண்டு மஞ்சூரியன் செய்யுங்கள். இந்த வெஜ் மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குறிப்பாக இது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவதோடு, அவர்களின் பசியும் அடங்கும்.

உங்களுக்கு வெஜ் மஞ்சூரியன்/வெஜ் மஞ்சூரியன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் மஞ்சூரியன்/வெஜ் மஞ்சூரியன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.உங்க வீட்டுல காய் நிறைய இருக்கா? அப்ப இப்படி வெஜ் மஞ்சூரியன் செஞ்சு கொடுங்க..  விரும்பி சாப்பிடுவாங்க.. | Veg Manchurian Gravy Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

வெஜ் மஞ்சூரியன் பால்ஸ் செய்வதற்கு…

* முட்டைக்கோஸ் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

* கேரட் – 1 கப் (துருவியது)

* குடைமிளகாய் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* சில்லி சாஸ் – 1/2 டீஸ்பூன்

* சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்

* மைதா – 2 டேபிள் ஸ்பூன்

* சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

கிரேவி செய்வதற்கு…

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* குடைமிளகாய் – 1 (பெரிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

* சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – 1 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் முட்டைக்கோஸ், கேரட், குடைமிளகாய், சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகுத் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மைதா, சோள மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* அதன் பின் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு சில்லி சாஸ், சோயா சாஸ், தக்காளி கெட்சப் சேர்த்து, வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்து, மிளகுத் தூளை சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி வேக வைக்க வேண்டும்.

* பின் பொரித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து கிளறி, கிரேவியாக வேண்டுமானால் சற்று நீர் இருக்கும் போதே அணைத்துவிட வேண்டும் (ட்ரையாக வேண்டுமானால், நீரை வற்றவிட்டு இறக்க வேண்டும்.).

இப்போது சுவையான வெஜ் மஞ்சூரியன் கிரேவி தயார்.

Related Post

பன்முகம் கொண்ட போட்டியாளர்களுடன் இனிதே தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 8 – யாரெல்லாம் வந்துருக்காங்க தெரியுமா..?

Posted by - October 7, 2024 0
பன்முகம் கொண்ட போட்டியாளர்களுடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இனிதே தொடங்கியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த பிரம்மாண்ட…

பிரியங்காவின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட 5 தொகுப்பாளினிகள்.. கருவேப்பிலை மாதிரி தூக்கி எறிந்த விஜய் டிவி

Posted by - September 16, 2024 0
விஜய் டிவி பொருத்தவரை எக்கச்சக்கமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் மக்களை பொழுதுபோக்கும் நிகழ்ச்சியாக பெயர் வாங்கி வெற்றி பெற்று வருகிறது. ஆனால் இதற்கு அடித்தளமாக இருந்த…

பிக் பாஸ் 7 வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளரின் கணவர்! குடும்ப சண்டை வீதிக்கு வருகிறதா?

Posted by - July 25, 2023 0
பிக் பாஸ் 7 விஜய் டிவியில் பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.…

சின்னத்திரையில் களமிறங்கும் முன்னணி நடிகை வரலட்சுமி.. எந்த நிகழ்ச்சியில் பாருங்க

Posted by - February 15, 2025 0
வரலட்சுமி சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி. ஆனால் கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தற்போது பிடித்துள்ளார். கதாநாயகியாக மட்டுமின்றி வில்லியாகவும் துணிச்சல்…

முடிவுக்கு வருகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. மீண்டும் இணைந்த குடும்பம்? அடுத்த வார ப்ரொமோ

Posted by - April 16, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பம் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மூர்த்தி, கதிர் ஒரே வீட்டில் இருக்க, ஜீவா மற்றும் கண்ணன் இருவரும் குடும்பத்தில் இருந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *