கார்த்தி நடிக்கும் படங்கள் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் இத்தனை கோடியா? புது பிரம்மாண்டம்

314 0

நடிகர் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பல விருதுகளை வென்ற திரைப்பட இயக்குநர் ராஜு முருகன், கார்த்தியின் இந்த 25 வது படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.கார்த்தி நடிக்கும் படங்கள் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் இத்தனை கோடியா? புது  பிரம்மாண்டம்

K.E.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் (சூது கவ்வும், காதலும் கடந்து போகும்) புகழ் இயக்குநர் நலன் குமாரசாமியின் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பிலும் ஆகஸ்ட் மாதம் கார்த்தி கலந்துகொள்ளவிருக்கிறார். இடையில், ஜப்பான் படத்தின் கடைசி பாடல் காட்சிக்காக நேரம் ஒதுக்கியுள்ளார். ஜப்பான் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், மேலும் இந்த பிரம்மாண்டமான பாடலை படமாக்க பல கோடி மதிப்பிலான செட் அமைக்கப்படுகிறது.

பாடல் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அக்டோபர் மாதத்திற்குள் நலன் படத்தின் படப்பிடிப்பை முடிக்க கார்த்தி திட்டமிட்டுள்ளார். இந்த இரண்டு பெரிய படங்களை முடித்த பிறகு, நடிகர் கார்த்தி நவம்பரில் தனது 27வது பட இயக்குனர் பிரேம் குமார் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார். #கார்த்தி27 படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், முன்னணி ஆளுமையான பிசி ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் #கார்த்தி27ஐ தயாரிக்கிறது.

2022 ஆம் ஆண்டில் PS1, விருமன் மற்றும் சர்தார் என மூன்று படங்களை தந்ததன் மூலம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார் கார்த்தி. மேலும் 2023 ஆம் ஆண்டை பொன்னியின் செல்வன் 2 எனும் ப்ளாக்பஸ்டர் வெற்றியுடன் துவங்கியுள்ளார். அடுத்ததாக ஜப்பான் தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளிவரத் தயாராகி வருகிறது.

கார்த்தி தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புக்கு முன்பாகவே சிறந்த OTT தளங்கள், சாட்டிலைட் சேனல்கள், மியூசிக் லேபிள்கள் மற்றும் முக்கிய விநியோகஸ்தர்களிடமிருந்து வியாபார அழைப்பு வரப்பெற்று, லாபகரமான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன.

ப்ரீ ரிலீஸ் பிசினஸ் எனப்படும், பட வெளியீட்டுக்கு முன்பான வியாபாரத்தில் தற்போது நடிகர் கார்த்தியின் படங்கள் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.

Related Post

கேப்டன் மில்லர் பிஸினஸ் இத்தனை கோடிகளா?- தனுஷின் அடுத்தக்கட்டம்

Posted by - January 5, 2024 0
கேப்டன் மில்லர் தமிழ் சினிமாவில் இவர் எல்லாம் ஒரு நடிகரா என ஆரம்பத்தில் விமர்சிக்கப்படுபவர் தனுஷ். ஆனால் இப்போது இவரின் நடிப்பை பற்றி பாராட்டாத பத்திரிக்கையே இல்லை…

ஆஸ்கருக்கு செல்லும் விக்ரமின் தங்கலான் படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - May 6, 2023 0
தங்கலான் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்காகவே வித்தியாசமான கெட்டப்பில்…

அந்த வேதனையில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.. சமந்தா வேதனை

Posted by - April 4, 2023 0
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா இப்போது அடிக்கடி நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்ட நாட்களை நினைவுப்படுத்தி பேசி வருகிறார். தற்போது சாகுந்தலம் படத்தை…

ஒரே பதிவில் மெய்யழகனை குத்தி கிழிச்ச ப்ளூ சட்டை மாறன்.. மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை!

Posted by - September 30, 2024 0
‘திருப்பதி லட்டு’ விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதால்தான் மெய்யழகன் படம் இரு மாநிலங்களிலும் ஓடவில்லை என்று பிரபல சினிமா விமர்சகர் கிண்டலடித்துள்ளார். 96 என்ற சூப்பர் ஹிட் படத்திற்குப்…

ரஜினியை தொடர்ந்து ரீ ரிலீஸாகும் கமல் படம்

Posted by - January 25, 2023 0
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த திரைப்படம் ‘ஆளவந்தான்’. இப்படம் விரைவில் ரீ – ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.#aalavandhan #kamal #ulaganayagan #aandavar #kamalhassan…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *