கேரளாவில் 6 வயது மகளை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை…

261 0

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் மாவேலிக்கரையை அடுத்த புன்னமூடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38). இவருடைய மனைவி வித்யா. இந்த தம்பதியின் ஒரே மகள் நக்ஷத்ரா (6). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். வெளிநாட்டில் மகேஷ் வேலை பார்த்தபோது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வித்யா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மகேஷ் சொந்த ஊர் திரும்பினார்.Delhi triple murder: Couple, maid found murdered inside West Delhi house, 2  arrested - India Today

அதன் பிறகு அவர் வெளிநாட்டுக்கு செல்லவில்லை. தொடர்ந்து மகேஷின் தந்தையும் ரெயிலில் அடிபட்டு இறந்து விட்டார். இதனால் தாய் சுனந்தா (62), மகள் நக்ஷத்ராவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சுனந்தா பக்கத்து வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் நக்ஷத்ராவும், மகேசும் மட்டும் இருந்தனர். அந்த சமயத்தில் நக்ஷத்ராவின் அலறல் சத்தம் கேட்டது. உடனே பதற்றத்துடன் அங்கு சுனந்தா ஓடி வந்தார். வீட்டு சோபாவில் கழுத்தில் வெட்டுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் நக்ஷத்ரா கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அங்கு கையில் கோடாரியுடன் மகேஷ் ஆவேசமாக நின்றார். பின்னர் திடீரென சுனந்தாவையும் அவர் தாக்கினார். அவர் தடுத்ததால் கையில் வெட்டு விழுந்தது. இதற்கிடையே அங்கு பொதுமக்கள் திரண்டதால் மகேஷ் தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் படுகாயம் அடைந்த நக்ஷத்ராவை மீட்டு சிகிச்சைக்காக மாவேலிக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகேஷின் தாயார் சுனந்தாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி இறந்த நிலையில் 2-வது திருமணம் செய்ய மகேஷ் பெண் பார்த்து வந்துள்ளார்.

ஆனால் மகேசுக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததால், பலரும் மகேசுக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை என தெரிகிறது. இதனால் மகேசுக்கு தன்னுடைய மகள் மீது வெறுப்பு ஏற்பட்டு கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து மாவேலிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி மகேஷை சிறையில் அடைத்தனர். 2-வது திருமணம் செய்ய இடையூறாக இருந்ததால் 6 வயது மகளை தந்தை கொடூரமாக வெட்டிக்கொன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Post

ரிலையன்ஸுடன் இணைகிறது டிஸ்னி… 11,500 கோடி ரூபாய் முதலீடு…

Posted by - February 29, 2024 0
ரிலையன்ஸுடன் இணைகிறது டிஸ்னி… 11,500 கோடி ரூபாய் முதலீடு… ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னியின் இந்திய ஊடக நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடிவுசெய்துள்ளன. இந்த கூட்டு…

‘அனிமல்’ திரைப்படமும் ‘டாக்சிக்’ கருத்துகளும் – இணையத்தில் சூடுபிடித்த ‘ஆல்ஃபா ஆண்’ விவாதம்

Posted by - January 31, 2024 0
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்து இயக்கிய படம் ‘அனிமல்’. ரன்பீக் கபூர் நாயகனாக நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி…

பிக் பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழையும் மியா கலிஃபா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Posted by - November 28, 2022 0
பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஹிந்தி, தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி…

அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உள்ளது – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

Posted by - November 21, 2025 0
அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார். உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய் நவம்பர் 23 ஆம்…

வன்முறை நீடித்து வரும் நிலையில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர்கள்

Posted by - July 25, 2023 0
மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்களுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *