கைகளையும் மணிக்கட்டுகளையும் பலப்படுத்தும் காகாசனம்

327 0

காக்கையின் உருவ அமைப்பை ஒத்து இருப்பதால் இந்த ஆசனம் காகாசனம் என்று பெயர் பெற்றது. மேலும், காக்கையின் கால்கள் பலமாக இருப்பது போல், காகத்தின் கால்களாக பயன்படுத்தப்படும் நம் கைகள் பலம் பெறுகின்றன. காகங்கள் மிக புத்திசாலியான பறவைகள், அவை சூழலுக்கு ஏற்றாற் போல் தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் திறன் பெற்றவை.கைகளையும் மணிக்கட்டுகளையும் பலப்படுத்தும் காகாசனம் | kakasana Crow Pose

காகாசனத்தில் நம்முடைய சுவாதிட்டான சக்கரம் தூண்டப்படுவதால் நம் உடலின் ஆற்றல் பெருகுகிறது. செய்முறை விரிப்பில் நேராக நிற்கவும். மூச்சை வெளியேற்றிக் கொண்டே குனிந்து உள்ளங்கைகளை தரையில் வைக்கவும். இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையில் தோள் அளவு இடைவெளி இருக்க வேண்டும்.

கை முட்டியை மடக்கி, குதிகால்களை உயர்த்தி கால் முட்டியை மேல்கைகளின் மேல் வைக்கவும். மெதுவாக கால்களை உயர்த்தி கைகளால் உடலைத் தாங்கி நிற்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் மீண்டும் பழைய நிலைக்கு வரவும். தோள், முட்டி, மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் வலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யும்போது வலி ஏற்பட்டால் தொடர்ந்து பயில்வதைத் தவிர்க்கவும். முதுகுத்தண்டு பிரச்சினை உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

பலன்கள்

கைகளையும் மணிக்கட்டுகளையும் பலப்படுத்துகிறது. சீரணத்தை மேம்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் இயக்கத்தை செம்மையாக்குகிறது. கவனத்தை கூர்மையாக்குகிறது. சமநிலையான உடலையும் மனதையும் அளிக்கிறது.

Related Post

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வந்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- யார் பாருங்க

Posted by - December 21, 2023 0
விஜய் சீரியல்கள் விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அதில் பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை தொடர்கள் TRPயில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த…

படத்தை விட அந்த விஷயத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் அனிருத்.. வாய்யடைந்துபோன பிரபலங்கள்

Posted by - August 23, 2023 0
அனிருத் மிழ் திரையுலகின் தற்போதைய நம்பர் 1 இசையமைப்பாளர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அனிருத். இவர் இசையில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.…

முடியப்போகும் குக் வித் கோமாளி, வந்தது பிக்பாஸ் 7வது சீசன் அப்டேட்- இந்த விஷயம் தெரியுமா?

Posted by - June 13, 2023 0
பிக்பாஸ் 7 TRPயின் நாயகனாக கடந்த சில வருடங்களில் இருந்து கலக்கி வருகிறது பிக்பாஸ். ஒவ்வொரு சீசனிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான TRP அதிகரித்துக் கொண்டே தான்…

புத்தாண்டை முன்னிட்டு ஜியோ, ஏர்டெல், வேடாஃபோன் – ஐடியா நிறுவனங்களில் ஓராண்டு சூப்பர் ஆஃபர்

Posted by - January 7, 2023 0
ஓராண்டு வேலிடியுடன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை தேர்ந்தெடுத்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் இது சரியான நேரமாக இருக்கும். புத்தாண்டை முன்னிட்டு ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் போன்ற முன்னணி…

சளி, இருமலால் தொல்லையா? அப்போ நண்டு ரசம் செய்து சாப்பிடுங்க!

Posted by - February 24, 2023 0
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் ரசம் இன்றியமையாத ஒரு இடத்தை பெற்று இருக்கும். ரசமானது நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்கு மிகவும் உதவுகிறது. காய்ச்சல்,சளி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *