கொரோனா பரவலுக்கு பிறகு மாரடைப்பு பாதிப்பு அதிகரிப்பு- மருத்துவமனைகளில் தீவிர ஆராய்ச்சி

278 0

புதுடெல்லி:

கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது தொடர்பான 3 வெவ்வேறு ஆய்வுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுவது தொடர்பாக சுமார் 40 மருத்துவமனைகளில் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கரோனா இதயக் கோளாறு தொடர்பு நிஜமா? | Heart disease - hindutamil.in

அதேவேளையில், கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மாரடைப்புக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து சுமார் 30 மருத்துவ மனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதயம் சார்ந்த நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக தேசிய தொற்றாநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது.

அந்த நிதியைக் கொண்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ம்ஸ் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்கீழ் 60 கோடிக்கும் அதிகமானோர் பலனடைந்துள்ளனர். இதயம் சார்ந்த நோய்களுக்கான பொதுப் பெயர் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Post

புது ரூல்ஸ்.. CIBIL ஸ்கோர் விதிகளில் புது மாற்றம்.. தினமும் 100 ரூபாய் அபராதம்.. உடனே கவனியுங்க..

Posted by - December 6, 2024 0
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடன் தகவல் நிறுவனங்கள் தற்போது வங்கிகள் (bank) அல்லது ஃபைனான்சியல் நிறுவனங்கள் (non-banking finance companies – NBFC) வாடிக்கையாளர்களின் கடன்…

வெப்பமயமாவதால் கடல் மட்டம் உயருகிறது- சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ஆபத்து

Posted by - March 14, 2023 0
திருப்பதி: கடல் வெப்பநிலையை கணக்கிடுவது 1900ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. பல தசாப்தங்களாக இந்த வெப்பம் அதிகரித்து வருகிறது. 1901க்குப் பிறகு அது மேலும் மேலும் அதிகரித்தது. கடந்த…

பெயரை கேட்டாலே எச்சில் ஊறுது: ஆந்திராவில் வினோத ஊறுகாய் கிராமம்

Posted by - July 3, 2023 0
திருப்பதி: ஊறுகாய் என்ற வார்த்தையை கேட்கும் போதே நம் வாயில் எச்சில் ஊற தொடங்குகிறது. தென்னிந்திய உணவைப் பொறுத்தவரை காரசாரமான ஊறுகாய் இல்லாமல் நிறைவடைவதில்லை. ஊறுகாய் தயாரிப்பு…

நாளை சர்வதேச பிரியாணி தினம்- நிமிடத்திற்கு 219 ஆர்டர்களை குவிக்கும் பிரியாணி பிரியர்கள்

Posted by - July 1, 2023 0
புதுடெல்லி: அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் எத்தனையோ இருந்தாலும் அனைவரின் தேர்வாக இருப்பதில் கம… கம…, சுடச்சுட பிரியாணி தான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் ஆன்லைன்…

90 நாடுகளில் 8,330 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்: மத்திய அரசு தகவல்

Posted by - July 29, 2023 0
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெளிநாடு சிறைகளில் வாடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் எழுத்துப்பூர்வமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *