சன் டிவி-யில் விஜய்யின் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா!

208 0

இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி புத்தாண்டை முன்னிட்டு சன் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது. 

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 24-ம் தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முழு உற்சாகத்துடன் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஜனவரி 1, 2023 அன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. இதன் ப்ரோமோவை தற்போது சன் டிவி வெளியிட்டுள்ளது. வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை நேரில் காண முடியாதவர்கள், டிவி-யில் பார்த்து ரசிக்கலாம்.

இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதே நேரத்தில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த துணிவு படத்துடன் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மோதவுள்ளது.

படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, வாரிசு தயாரிப்பாளர்கள் ஒரு பிரமாண்ட ஆடியோ வெளியீட்டை ஏற்பாடு செய்தனர். இதில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பெரிய கூட்டத்தில் ரசிகர்களை சந்தித்து பேசினார் விஜய். இந்த நிகழ்வில் பல ஆயிரம் ரசிகர்கள் ‘தளபதி’ என்று கோரஸாக கூறி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை சன் டிவியில் ஜனவரி 1, 2023 அன்று மாலை 6.30 மணிக்கு பார்க்கலாம்.

வாரிசு முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டர்டெய்னர் குடும்ப கதையாக உருவாகியுள்ளது. தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் தளபதி விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, ஜெயசுதா, சங்கீதா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 30, 2023 0
மாமன்னன் உதயநிதியின் கடைசி திரைப்படமாக மாமன்னன் நேற்று வெளிவந்தது. மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில்…

என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு காஞ்சனா படத்தில் நடித்தது தான்.. திருநங்கை பிரியா ஷாக்கிங் பேட்டி

Posted by - June 27, 2023 0
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காஞ்சனா. நகைச்சுவை கலந்த திகில் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்று…

‘சேட்டன் வந்தெல்லே..’ வேட்டையன் படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது!

Posted by - September 10, 2024 0
‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது. ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது.…

தியேட்டரில் கூலி சேர் காலி… நாளுக்கு நாள் சரியும் வசூல் – 4 நாள் எவ்வளவு?

Posted by - August 18, 2025 0
நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு? என்பதை கீழே காணலாம். நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த 14ம் தேதி ரிலீசானது. லோகேஷ்…

“மேகி” கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனா? நக்மாவா? – ரகசியத்தை உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

Posted by - March 20, 2026 0
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட் காமெடி திரைப்படமாக இருக்கும் ‘பஞ்சதந்திரம்’ படத்தின் உருவான விதம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *