மாஸ்க், தடுப்பூசி, ஆக்சிஜன் எல்லாத்தை ரெடி பண்ணுங்க.. மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!

236 0

கொரோனா தடுப்பூசி மையம் போதிய மருத்துவ பணியாளர்களுடன் தயாராக இருக்க மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

 

    • அடுத்த ஆறு மாதங்களுக்கு அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்யவும், உரிய சிகிச்சை அளிக்கவும் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களையும் தயாராக வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது.

 

  • இதற்காக, மாதிரி சோதனைக் கருவிகளை முன்கூட்டியே வாங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும், ஆக்சிஜன் செறிவூட்டிகளை உயிரியல் மருத்துவ பொறியாளர்கள் மூலம் சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
      • தற்போது, பயன்படுத்தப்படாத சிலிண்டர்களை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கவும், அவசரக்கால பயன்பாட்டிற்கு தயாராக வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

     

      • மேலும், என்.95 முகக்கவசம், பிபிஇ கிட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும், மருந்துகளையும் தயார் நிலையில் வைக்கவும்,

     

      • மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் உடன் இருப்பவர்கள் முகக்கவசம் அணிவது உட்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

     

      • அத்துடன், மருத்துவமனை வளாகத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கவும், கொரோனா தடுப்பூசி மையம் போதிய மருத்துவ பணியாளர்களுடன் தயாராக இருக்கவும், கொரோனா வார்டுகளில் கூடுதலாக படுக்கைகளை இருப்பு வைக்கவும் மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

     

    • குறிப்பாக, ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யும் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், தொற்று பாதிப்பு குறித்து உடனடியாக முடிவை தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Post

மாவட்ட ஆட்சியரை அவமதித்த உதயநிதி! : அண்ணாமலை கண்டனம்

Posted by - January 16, 2025 0
இன்பநிதி நண்பர்களுக்காக கலெக்டரை நிற்க வைத்த அமைச்சர் மூர்த்தி! திமுகவின் மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள் என்று…

திடீரென விற்கப்படும் விஜய் டிவி- போட்டிபோடும் TV நிறுவனம்…

Posted by - August 2, 2023 0
விஜய் டிவி தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது விஜய். ஸ்டார் குழுமம் அந்த தொலைக்காட்சியை வாங்கியவுடன் ஸ்டார் விஜய் ஆனது, அதன்பின் அதை உலக அளவில்…

கண்பார்வையை அதிகரிக்க கேரட் மட்டுமில்லை இந்த எளிய பொருட்களையும் சாப்பிடலாமாம்… ட்ரை பண்ணுங்க…!

Posted by - October 17, 2023 0
நம் உடலின் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்று கண்கள். நம் கண்களால் தான் நாம் இந்த உலகை ரசிக்க முடிகிறது. ஆனால், மோசமான வாழ்க்கை முறையால் கண்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது… 91.55% பேர் தேர்ச்சி- இம்முறையும் மாணவிகளே அதிக தேர்ச்சி!

Posted by - May 10, 2024 0
தமிழ்நாட்டில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம்…

தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்களிடம் 40 % கமிஷன் கேட்கும் திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Posted by - April 13, 2024 0
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, கோயம்புத்தூர் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் குறித்துக் கவலையே இல்லாமல் இருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக சார்பாக கோவை பாராளுமன்றத் தேர்தல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *