சீனாவில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்… மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

232 0

கொரோனா தொற்றின் போது கடைபிடிக்கப்பட்ட கண்காணிப்புக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை செயல்படுத்த வேண்டும்.

சீனாவில் குழந்தைகளிடையே பரவி வரும் மர்ம காய்ச்சல் எதிரொலியாக , மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருந்துகள், காய்ச்சலுக்கான தடுப்பூசிகள், ஆக்சிஜன், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் நோய் தடுப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் காணொலி காட்சி வாயிலாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.பின்னர் பொதுசுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தொற்றின் போது கடைபிடிக்கப்பட்ட கண்காணிப்புக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை செயல்படுத்த வேண்டும். குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே, இன்ப்ளூயன்ஸா காய்ச்சல், கடுமையான சுவாச நோய் போன்றவைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும்.இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் தரவுகளை, ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள், குறிப்பாக, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் பரிசோதனை மாதிரிகளை, மாநிலங்களில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பாகிஸ்தானில் துணிகரம் – இந்துக் கோவில்கள் மீது தொடர் தாக்குதல்

Posted by - July 17, 2023 0
லாகூர்: பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டுகால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது. இந்த…

அடங்காத ரத்தவெறி..

Posted by - July 26, 2025 0
#Gaza #Trump #IsraelIsrael #GazaWar #WorldNews காசாவில் இறக்க வேண்டும் என்ற ஹமாஸின் ஆசையை இஸ்ரேல் பூர்த்தி செய்ய வேண்டும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.…

விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள்- 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீண்ட அதிசயம்

Posted by - June 10, 2023 0
கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது.…

இன்று உலக கிறிஸ்துமஸ் திருநாள்- ஒரு பார்வை

Posted by - December 25, 2023 0
உலகம் முழுவதும் மிகவும் ரசிக்கப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் ஒன்றாகும். இந்த நாள் மகிழ்ச்சியையும் அன்பையும் குறிக்கிறது. எந்த மதத்தைப் பின்பற்றினாலும், அனைவராலும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.…

இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்

Posted by - August 6, 2025 0
இந்தியாவிற்கு அமெரிக்கா விடுக்கும் வரி மிரட்டலும், வர்த்தக அழுத்தமும் சட்டவிரோதமானது என இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *