செடியிலேயே அழுகும் அவலம்; நாள்தோறும் எகிறும் தக்காளி விலை – கிலோ ரூ.130 வரை விற்பதால் மக்கள் அவதி!

280 0
சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை 130 ரூபாயாக உயர்ந்து விற்கப்பட்டு வரும் நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கிலோ ஒன்றுக்கு 160 வரை விலை அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக விளைச்சல் குறைவு மற்றும் வரத்து குறைவால் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து விலை அதிகரித்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் மளிகை கடை மற்றும் காய்கறி கடைகளில் முதல்தரமான தக்காளி 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தங்கம் போல் விலையுயர்ந்த தக்காளி - காரணம் என்ன? Tomato rates are Hike what  is the reason?

அன்றாட சமையலில் பயன்படுத்தக் கூடிய அத்தியாவசிய காய்கறிகளின் விலையுயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையை தவிர்த்து மற்ற ஊர்களிலும், பெரும்பாலும் 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வரும் தக்காளி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் பெய்த தொடர்மழை காரணமாக செடியிலேயே தக்காளிகள் அழுகும் நிலை ஏற்பட்டது. இதனால் தேவை அதிகரித்து வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.

தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், விலையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து அமைச்சர் பெரிய கருப்பன் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை – திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?

Posted by - December 30, 2024 0
ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து பேசியது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய் அறிக்கை: தமிழக வெற்றிக்கழகம்…

அலப்பறை கிளப்புறோம்.. புஷ்பா 2 படத்தில் என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்

Posted by - December 6, 2024 0
புஷ்பா 2 படம் இன்று ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் முழுக்க முழ அல்லு அர்ஜுன் ஷோவாக உள்ளது. ஆனால் பட ரிலீசுக்கு முன்பு…

ஒரே சாய்ஸ் அதிமுக கூட்டணி தான்…தவெக நிர்வாகிகளிடம் விஜய் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.?

Posted by - April 26, 2025 0
அதிமுகவிடம் ஓவராக டிமாண்ட் செய்து, கூட்டணியை கோட்டைவிட்டு விட்டதாக தவெக நிர்வாகிகளிடம் விஜய் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் யார் என்று தெரியுமா.? உங்க பேச்சை எல்லாம்…

ஜெயலலிதாவின் விசுவாசி.. பால் பிசினஸில் கொடி கட்டி பறந்த நயினார்.. யார் இந்த திருநெல்வேலிக்காரர்? Nainar Nagenthran to be 13th Tamil Nadu BJP president….

Posted by - April 11, 2025 0
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எட்டே ஆண்டுகளில் அதன் மாநில தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்த…

பெண் நடன கலைஞருக்கு பாலியல் சித்ரவதை – திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்கு

Posted by - March 23, 2024 0
கரூரில் பெண் நடன கலைஞரை பாலியல் ரீதியாக சித்ரவரை செய்த குற்றச்சாட்டில் திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் பெண் நடன…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *