சென்னையில் வெள்ளம் தேங்கியதற்கு காரணமே இதுதான்.. விளாசிய நீதிமன்றம்! மாநகராட்சி மீது சாடல்

273 0

சென்னை:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர். இந்த வெள்ள பாதிப்புகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் முக்கியமானவை என உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது.

2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று ஒரு வாரத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போதுதான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. இருப்பினும் புறநகர் பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாததால் மின்சாரமின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

ஒரே நாளில் 40 செ.மீ வரை மழை பெய்ததால்தான் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீ தான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த 4ம் தேதி பெய்திருக்கிறது. எனவேதான் வெள்ளம் வடிய அதிக நாட்கள் ஆகியுள்ளன. வெள்ளத்தில் ஏராளமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன.சென்னையில் வெள்ளம் தேங்கியதற்கு காரணமே இதுதான்.. விளாசிய நீதிமன்றம்! மாநகராட்சி  மீது சாடல் | The high court criticizes that plastic waste is the cause of  stagnant rains in ... சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதில் பெரும்பாலும் பைக்குகளும், ஆட்டோக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாமானிய மக்களின் வாழ்வில் கூடுதல் பொருளாதார சுமை ஏறியிருக்கிறது.

ஒரே நாளில் 40 செ.மீ வரை மழை பெய்ததால்தான் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீ தான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த 4ம் தேதி பெய்திருக்கிறது. எனவேதான் வெள்ளம் வடிய அதிக நாட்கள் ஆகியுள்ளன. வெள்ளத்தில் ஏராளமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதில் பெரும்பாலும் பைக்குகளும், ஆட்டோக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாமானிய மக்களின் வாழ்வில் கூடுதல் பொருளாதார சுமை ஏறியிருக்கிறது.

டிச.4ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை சென்னை முழுவதும் செல்போன் இணைப்புகள் மற்றும் இன்ர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. எனவே மீட்பு பணிகளில் கடுமையான தாமதம் ஏற்பட்டது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக செல்போன் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்து உயர்நீதிமன்றம் கடும் விமர்சனங்களை தெரிவித்திருக்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது தொடர்பான சீராய்வு மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். அதாவது,

“பெருநகர சென்னை மாநகராட்சி வரம்புக்குள் பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரிக்கும் முறை மோசமாக செயல்படுத்தப்படுகிறது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் வடியாமல் தேங்கி நின்றதற்கு பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகள் நீர் வழிப்பாதையை அடைத்ததே காரணம். குப்பைகளை வீடுகளிலிருந்து பெற்று அதை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரிப்பது முறையாக செயல்படுத்தப்படவில்லை.

பிளாஸ்டிக் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை” என்று கூறினர். மேலும் ஆவின் பால், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விநியோகிப்பதற்கு பதில், ஏன் கண்ணாடி பாட்டிலில் விநியோகிக்க கூடாது என்று கேள்வி எழுப்பி, இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று ஒத்தி வைத்தனர். வெள்ளிக்கிழமை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆஜராக வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மழை வெள்ளம் வடியாததற்கு பிளாஸ்டிக் கழிவுகள் முக்கிய காரணம் என நீதிபதிகள் கூறியிருப்பது, பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை மீண்டும் உருவாக்கியுள்ளது.

Related Post

மருத்துவ கல்லூரி மாணவரிடம் ரூ.7¾ லட்சம் ஆன்லைன் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Posted by - July 10, 2023 0
புதுச்சேரி: புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சசிதரன் (வயது 23). இவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு…

எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Posted by - September 8, 2023 0
நடிகர் மாரிமுத்து #actormarimuthu #ethirneechal #tamilserial #suntv #rip #jailer சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி…

2023: ரத்னவேலு முதல் ஜாக்கி பாண்டியன் வரை – நடிப்பால் வசீகரித்த வில்லத்தனங்கள்!

Posted by - December 27, 2023 0
எல்லா கதைகளும் பிரச்சினைகளாலும் அதனை உருவாக்கும் எதிர்மறை கதாபாத்திரங்களாலும் மட்டுமே சுவாரஸ்யம் பெறுகின்றன. ‘ஹீரோ’வை ஹீரோவாக்குவதே பலமான வில்லன் கதாபாத்திரம்தான். அவர்களின் அழுத்தமான நடிப்பு பிரச்சினையின் தீவிரத்தை…

குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!

Posted by - March 7, 2025 0
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தலையில் குல்லாவுடன் லுங்கி அணிந்து வந்துள்ளார் விஜய். தவெக சார்பில்…

14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

Posted by - June 20, 2023 0
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *