தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டம்.. செயற்குழு உறுப்பினர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அழைப்பு

279 0

நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளதாக நடிகர் விஜய் அறிவித்தார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு என்றும், 2024 பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கட்சியின் சின்னம், கொடி மற்றும் கொள்கைகளை அறிவித்து மக்களிடம் செல்ல உள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து, அரசியல் என்பது ஒரு தொழில் அல்ல என்றும், தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்க உள்ளதாகவும் கூறியிருந்தார். இதன் மூலம், தனது 69வது படத்துடன் அவர் சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட உள்ளார்.

இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் செயற்குழு கூட்டத்தை சென்னையில் இன்று கூட்டியுள்ளார். இதில் பங்கேற்க கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Post

கோவை பீளமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்றது யார்?- 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

Posted by - July 29, 2023 0
கோவை: கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜிநகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர். இவருக்கு ஜெகதீஷ்வரி (40) என்ற மனைவியும், கார்த்திகா(16) என்ற…

இலையிலேயே குட்டி தூக்கம் போட்ட திமுக தொண்டர்கள் – முதல்வர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் விரக்தி!

Posted by - June 2, 2025 0
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் திமுக தொண்டர்கள் இலையிலேயே படுத்து உறங்கிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.…

கோவில்களுக்குள் செல்போன், கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது- அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - September 2, 2023 0
சென்னை: பழனி தண்டாயுதபாணி கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு படம் சமூக வலைதளங்களில் உலாவி வருவதாக சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த…

புதிய ஆலியா மானசா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Posted by - November 30, 2022 0
சரிகம தயாரிப்பு நிறுவனம் தற்போது தயாரித்துள்ள மெகாத் தொடர் இனியா. இந்த தொடரில் நடிகை ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கிறார். சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு புதிய…

கடலூர் ரயில் – வேன் விபத்து; மாணவர்கள் மரணத்திற்கு காரணம் கேட்கீப்பரா? ஓட்டுனரா?

Posted by - July 8, 2025 0
கடலூர் செம்மங்குப்பத்தில் ரயில் மீது பள்ளி வேன் மோதிய விபத்து யாருடைய அலட்சியத்தால் நிகழ்ந்தது என புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *