தவெக மாநாட்டு திடலில் எதற்கு இத்தனை தலைவர்களின் பேனர்.. தெளிவில்லாத அரசியல் பாதையில் பயணிக்கிறாரா தளபதி?

144 0

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெற இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக அரசியல் தலைவர்களின் பார்வையும் கடந்த சில தினங்களாக தளபதியின் மீதுதான் இருக்கிறது. மாநாட்டை எப்படி நடத்தப் போகிறார், மாநாட்டில் என்ன பேசப் போகிறார் என்பதுதான் இப்போதைக்கு பெரிய எதிர்பார்ப்பு.நடிகர் விஜயும் தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டில் சின்ன ஒரு தவறு கூட நடந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார். இந்த மாநாட்டு நிகழ்ச்சிக்கு நடந்து கொண்டிருக்கும் முன்னேற்பாடுகளை பார்க்கும் போதே எந்த அளவுக்கு தரமாக ஸ்கெட்ச் போட்டு விஜய் அரசியலுக்குள் நுழைந்து இருக்கிறார் என்பது தெரிகிறது.கடந்த சில தினங்களாக மாநாட்டு திடலில் நிறைய அரசியல் தலைவர்களின் பேனர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேனர்களும் வைக்கப்படுகிறது. பொதுவாக ஒரு கட்சி மாநாடு என்றால் அந்த கட்சியை உருவாக்கியவர் அவர் பின்னால் அதை வழி கொண்டு நடத்தி வருபவர்கள் இவர்களுடைய புகைப்படங்கள் தான் இடம் பெறும்.

தெளிவில்லாத அரசியல் பாதையில் பயணிக்கிறாரா தளபதி?

அப்படி பார்த்தால் தமிழக வெற்றிக்கழகம் மாநாடு நடக்கும் திடலில் தலைவர் விஜய் பேனர் மட்டும் தான் இருக்க வேண்டும். ஆனால் இங்கே பெரியார், அம்பேத்கார், காமராஜர், அஞ்சலை அம்மாள் வேலு நாச்சியார் என நாளுக்கு நாள் பேனர் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

போதாத குறைக்க நேற்று தலையின் ரசிகன், தளபதியின் தொண்டன் என்ற பெயரில் அஜித்தும் அந்த பேனர் கூட்டத்தில் இணைந்து இருக்கிறார். மக்களுக்கு இந்த பேனர்கள் ஒருவித குழப்பத்தை தான் ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்த வரைக்கும் திராவிட அரசியல், திராவிடத்தை எதிர்க்கும் அரசியல், தன்னுடைய ஜாதி மக்களுக்காக போராட களமிறங்கும் அரசியல் கட்சிகள் தான் இருக்கிறது. ஆனால் இது எல்லாம் சேர்ந்த கலவையாக விஜய் தன்னை முன்னிறுத்துகிறார்.

திராவிட அரசியல் வேண்டுமா பெரியார் இருக்கிறார், தேசியம் வேண்டுமா காமராஜர் இருக்கிறார், தலித் அரசியல் வேண்டுமா அம்பேத்கர் இருக்கிறார், வன்னியர் அரசியல் வேண்டுமா அஞ்சலை அம்மாள் இருக்கிறார், முக்குலத்தோருக்கு வேலுநாச்சியார் இருக்கிறார் என  வாரிசு

போதாத குறைக்கு மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் இந்த மாநாட்டு திடலில் பேனர் வைப்பது, சமூக வலைத்தளத்தில் அரசியல் என்று வந்துவிட்டால் விஜய்க்கு தான் ஆதரவு என பேசுவது எல்லாமே விஜய் தரப்பில் இருந்து நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தெளிவான அரசியல் பாதையை நோக்கி விஜய் பயணிக்கிறாரா என்பது அவருடைய முதல் மாநாட்டு பேச்சில் தான் தெரியும்.

பட சமயத்தில் தில்ராஜ் பேசிய வசனம் தான் ஞாபகம் வருகிறது.

Related Post

14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

Posted by - June 20, 2023 0
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

புத்தாண்டு கொண்டாட்டமாக சேனல்கள் களமிறக்கும் புது படங்கள்.. கில்லி போல் தட்டி தூக்கிய விஜய் டிவி

Posted by - December 31, 2024 0
விழாக்காலம் என்றாலே கொண்டாட்டத்தோடு சேர்த்து டிவி சேனல்களில் என்ன புது படம் போடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து விடும். இதை நிஜமாகவே அதிக சந்தோஷத்தோடு எதிர்பார்த்துக்…

பூர்ணிமாவை லவ் பண்றிங்களா? விஷ்னு ஷாக்கிங்..

Posted by - January 24, 2024 0
பொதுவாக பிக் பாஸ் என்றாலே நல்ல வாழ்கை கிடைக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் லட்சம் லட்சமாக பணம் கிடைக்கு என்ற காலம் போய் இன்று சண்டைகளுக்கு சர்ச்சைகளுக்கும்…

நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - February 22, 2024 0
அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், 22,931 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு…

பொது மாறுதல்களுக்கான ஆசிரியர் கலந்தாய்வு மே 15-ந்தேதி தொடங்குகிறது …..

Posted by - May 12, 2023 0
திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெறும். சென்னை: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *