பொது மாறுதல்களுக்கான ஆசிரியர் கலந்தாய்வு மே 15-ந்தேதி தொடங்குகிறது …..

257 0

திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெறும்.

சென்னை: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் இந்த மாதம் 6-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இப்போது ஆசிரியர் கலந்தாய்வு வருகிற 15-ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு 15-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெறும். இதேபோல் அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) கலந்தாய்வும் 15-ந்தேதி நடைபெறும். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 16-ந்தேதியும், அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாறுதல்) 16-ந்தேதியும் நடைபெறும். கடந்த ஆண்டுகளில் பணி நிரவல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை மீளத்தாய் ஒன்றியத்திற்கு ஈர்த்தல் 17-ந்தேதி நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) மற்றும் அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) 19-ந் தேதியும் நடைபெறுகிறது. அரசு, நகராட்சி முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை-1 தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) 17-ந்தேதி நடைபெறும். இதே மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு 18-ந்தேதி நடைபெறும். இடை நிலை ஆசிரியர் அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் 20-ந்தேதி நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் மற்றும் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் ஆசிரியர்களுக்கு 22-ந்தேதியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் 23-ந்தேதியும் நடைபெறும். இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மற்றும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு 24-ந்தேதியும், கலந்தாய்வு நடைபெறும். அரசு நகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் வருவாய் வட்டத்திற்குள் 25-ந்தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 26-ந்தேதியும் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Post

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்: தொண்டர்கள், ரசிகர்கள் கண்ணீர்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள்…

தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் – ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் – எதில் தெரியுமா?

Posted by - July 8, 2025 0
இந்தியாவில் தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது இந்தியாவில் தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு 7.4 மதிப்பெண்களுடன் முதலிடம்…

வட மாநிலங்களில் கனமழை- தமிழ்நாடு முழுவதும் லோடு கிடைக்காமல் 2 லட்சம் லாரிகள் நிறுத்திவைப்பு

Posted by - July 10, 2023 0
நாமக்கல்: இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது. தமிழகத்தில் 4 லட்சத்து 75 ஆயிரம் லாரிகள் இயங்குகிறது. இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளீனர்…
tvk vijay

Hung Assembly: தமிழ்நாட்டில் உருவாகும் தொங்கு சட்டசபை: கோவா, மகாராஷ்டிரா வரலாறு தெரியுமா? என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

Posted by - May 8, 2026 0
தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்துள்ள நிலையில், விசிக நாளை ஆதரவு கொடுக்கும் என்று தெரிகிறது. இதனால் தமிழ்நாட்டில் முதன்முதலாக தொங்கு சட்டசபை உருவாகிறது. தமிழ்நாட்டில்…

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்- காரணம் என்ன?

Posted by - March 3, 2023 0
சென்னை: தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *