“தவெகவின் அடுத்த மாநாட்டில் ஜெ., இபிஎஸ் படம் வருமா?” – சீமான் கேள்வி

193 0

#TVK | #TVKVijay | #TVKMaduraiMaanadu | #TamilagaVettrikazhagam | #Vijay | #TVKLeader | #TVKMaanadu | #MaduraiTVKMaanadu | #TVKFlag | #தமிழகவெற்றிக்கழகம்‌ | #ntk #seeman

சென்னை: “மதுரை தவெக மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆரின் படங்களை எதற்காக வைத்திருக்கிறார்? அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் வருமா?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டையொட்டி கட்சி சார்பில் மதுரை முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளனர். அவர்களுக்காவது பேனர்களை வைத்தபின் அகற்றச் சொல்கின்றனர். எங்களை எல்லாம் வைக்கவே விடாமல் தடுக்கின்றனர். அரசியலில் இதுபோன்ற நெருக்கடிகளை சமாளித்து தான் வர வேண்டும்.தவெக மாநாட்டில் மக்களின் முன்பு அக்கட்சித் தலைவர் விஜய் முன்வைக்கும் தத்துவங்களை வைத்துதான் அவர் தம்பியா அல்லது எதிரியா என்பது தெரியவரும். திரும்பவும் திராவிடம், அதே கோட்பாடு, அதே கொள்கை என திமுகவை ஒழிப்பது மட்டுமே ஒருவருக்கு லட்சியமாக இருக்க முடியாது. தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்ன மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.அண்ணா தோற்றுவித்த கட்சியை ஒழிக்க வேண்டும் என்கிறார் விஜய். ஆனால் அண்ணா, எம்ஜிஆரின் படங்களை மாநாட்டில் வைத்திருக்கிறார். எதற்காக? அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் வருமா?விஜய்யின் பின்னால் திரண்டிருக்கும் ரசிகர்கள் அவருக்கு நண்பா, நண்பிகளாக இருக்கலாம். ஆனால் எனக்கு தம்பி, தங்கைகள். அவர்களுக்கு சரியான அரசியல் பாதையை சொல்ல வேண்டியது நமது கடமையாகும். அதற்கு சரியான தத்துவத்தை முன்வைத்து நகர வேண்டும். ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டால் அதில் உறுதியாக நின்று செயல்படவேண்டும். ஏற்கெனவே இருக்கும் அரசியல் சாரத்தை கொண்டுவருவதற்கு இன்னொரு அரசியல் கட்சி தேவையில்லை” என்று அவர் கூறினார்.

Related Post

எனக்கு வெட்கமாக இருக்கிறது; பதவியை துறக்க விரும்புகிறேன்: நேரு முன்னிலையில் திமுக மாவட்டச் செயலாளர் குமுறல்

Posted by - November 3, 2025 0
திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான…

அரசியலில் தனித்து விடப்பட்டதால் அந்தர் பல்டி.?!

Posted by - February 21, 2026 0
அரசியலில் தனித்து விடப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், விபரீதமான முடிவு ஒன்றை எடுக்க உள்ளதுபோல் தெரிகிறது. இன்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்திய அவர், திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்…

த.வெ.க.வை கண்டு பயத்தின் உச்சத்தில் தி.மு.க. – விஜய் கடும் விமர்சனம்

Posted by - September 9, 2025 0
வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட…

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி: மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

Posted by - March 16, 2026 0
தமிழக அரசி​யல் களம் குறித்து கருத்​துக் கணிப்பு வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணியை பின்​னுக்​குத் தள்​ளி, தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ)…

திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!

Posted by - March 26, 2026 0
தவெக பெண் ரசிகைகளை விபச்சாரி என்று விமர்சித்த அரசியல் ஆலோசகர் பொன்ராஜை கடுமையாகச் சாடியுள்ளார் தவெக விஜய். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிப்பதா என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்துள்ளதாகவும் அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *