திருமணமான பெண்களே… உங்கள் ஆதார் கார்டில் அப்பா பெயருக்கு பதில் கணவர் பெயரை மாற்ற வேண்டுமா..? ஈஸியா செய்ய இதோ வழி

279 0

முக்கியமாக திருமணம் ஆன பெண்கள் தங்கள் ஆதார் தகவல்களை, தங்கள் தந்தை பெயருக்கு பதில் தங்க கணவன் பெயரை உள்ளிடுவதில் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

 

இன்றைய சூழலில் வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு, எரிபொருள் இணைப்பு என எல்லாவற்றிற்கும் ஆதார் என்பது தேவைப்படுகிறது. பாஸ்போர்ட் எடுக்க உட்பட ஆதார் அனைத்து தரவுகளுக்கும் தகவல்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆதாரின் 12 இலக்க எண் தான் ஒரு இந்திய குடிமகனின் ஆதாரமாகவே மாறி வருகிறது. இந்நிலையில் அதன் விவரங்களில் பிழை இருந்தால் எப்படி சரி செய்வது என்று சொல்கிறோம்…

முக்கியமாக திருமணம் ஆன பெண்கள் தங்கள் ஆதார் தகவல்களை, தங்கள் தந்தை பெயருக்கு பதில் தங்க கணவன் பெயரை உள்ளிடுவதில் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எங்கே சென்று எப்படி மாற்றுவது என்று திணறி வருகின்றார். கவலைப்படாதீங்க மக்கா.. அது ரொம்ப ஈஸி தான்.திருமணமான பின்னர் தந்தை பெயருக்கு பதிலாக கணவர் பெயரை மாற்ற ஆன்லைன் வழியாகவும், மாற்றலாம்.

    • முதலில் உங்கள் ஆதார் அட்டையையும் உங்கள் திருமண சான்றிதழையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

 

    • திருமண சான்றிதழை ஸ்கேன் செய்தோ அல்லது தெளிவாக படம் எடுத்தோ கையில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

    • https://myaadhaar.uidai.gov.in/ என்ற ஆதாரின்  இணைய தளத்திற்கு செல்லவும். அதில் உங்கள் ஆதார் எண் பதிவிடவும்

 

    • ஆதாருடன் இணைக்கப்பட்ட எண்ணிற்கு OTP அனுப்பப்படும் அதை உள்ளிட்டு உங்கள் ஆதார் கணக்கிற்குள் உள்நுழையவும்.

 

    • வலது மேல் ஓரத்தில் உங்கள் ஆதார் கணக்குடன் இணைத்த புகைப்படத்துடன் உங்கள் ஆதார் கணக்கு திறக்கும்.

 

  • அதில் உங்கள் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், வீடு விலாசம், பிறந்த தேதி மாற்றும் தெரிவு இருக்கும். அதை க்ளிக் செய்யவும்.

 

  • அதில் நீங்கள் எதை மாற்ற வேண்டும் என்ற விருப்பம் கேட்கும். அதில் பெயர் மாற்றமென்று கொடுத்து தந்தை பெயருக்கு பதிலாக கணவர் பெயரை உள்ளிட்டு மாற்றவும்.

என்ன சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும்?

உங்களது கணவர் இவர் என்று நிரூபிக்கும் சான்றுகள் குறிக்கும் திருமண பதிவு சான்றிதழை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டணம் எவ்வளவு ஆகும்?

பெயர்மாற்றத்திற்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

எப்படி அப்டேட்டுகளை பார்ப்பது?

பின்னர் உங்கள் கோரிக்கைக்கான எண் தரப்படும். அதை வைத்து உங்கள் பெயர் மாற்றம் குறித்த அப்டேட்களை பார்த்துக்கொள்ளலாம்.

புதிய கார்டு எப்போது கிடைக்கும்?

பெயர்மாற்றப்பட்ட புதிய ஆதார் கார்டு 90 நாட்களுக்குள் உங்கள் ஆதார் கார்டில் உள்ள முகவரிக்கு போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

நேரடியாக எப்படி மாற்றுவது?

உங்களுடைய ஆதார் கார்டு, திருமண பதிவு சான்று, ஆகியவற்றின் நகல்களோடு அருகில் உள்ள இ சேவை மையத்திலோ , ஆதார் சேவை மையத்திலோ எளிதாக விண்ணப்பிக்கலாம். அதற்கும் கட்டணம் 50 தான். இனி எப்படி பெயரை மாற்றுவது என்று தயங்காமல் எளிதாக மாற்றுங்கள்

Related Post

லியோவில் நடித்த பிக்பாஸ் சாண்டி.. வேற மாதிரி பாப்பீங்க

Posted by - August 23, 2023 0
லியோ தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது லியோ படத்திற்காக தான். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில்…

லவ் டுடே பிரதீப் ரங்கநாதனை மோசமாக விமர்சித்த பிரபல நடிகை

Posted by - December 9, 2022 0
பிரதீப் இயக்கிய “கோமாளி” படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடித்த ஆனந்தி தற்போது பிரதீப் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்துள்ளார். லவ் டுடே “கோமாளி” படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான…

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறுகிறார் தெரியுமா.. இவர் தானா

Posted by - December 13, 2024 0
பிக் பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சாச்சனா…

மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த கோமாளி வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்

Posted by - March 14, 2023 0
விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுவது குக் வித் கோமாளி 4 ஷோ. சமையல் ப்ளஸ் காமெடி என இரண்டும் கலந்ததாக நிகழ்ச்சி உள்ளது. அதிலும்…

‘கன்டென்ட்’ கொடுத்தும் எவிக்‌ஷன்… திவாகரின் திடீர் வெளியேற்றம் உணர்த்துவது என்ன

Posted by - November 17, 2025 0
இந்த பிக்பாஸ் சீசனின் அதிக கன்டென்ட் கொடுத்த போட்டியாளர்களில் ஒருவரான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் வெளியேற்றம் யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது. போன வாரம் பிரவீனின் வெளியேற்றம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *