நேற்று விசித்ரா கேமரா முன்பு பேசிய அந்த வார்த்தை.. விமர்சிக்கும் ரசிகர்கள்.. பிக் பாஸ் வைத்த செக்

197 0

சென்னை:

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்திரா நேற்று தினேஷ் பற்றி கேமரா முன்பு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினேஷின் பர்சனல் வாழ்க்கை குறித்து விசித்திரா விமர்சித்து பேசிய விதத்தை குறித்து பலரும் திட்டி வருகிறார்கள்.அதே நேரத்தில் விசித்ராவிற்கு ரச்சிதா சப்போர்ட் கொடுத்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் விசித்திரா ரச்சிதாவிற்கு அட்வைஸ் கொடுத்திருப்பதும் அந்த வீடியோவில் இருக்கிறது.

அதாவது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சீசன் ஆரம்பமான முதல் நாளிலிருந்து சண்டை சச்சரவுகள் தான் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அதிலும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த கணேஷ் மற்றும் அதற்கு முன்பே இருந்த விசித்திராவிற்கும் இடையே கருத்து மோதல்கள் கன்னாபின்னா வென்று இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் ஒரே அணியாக இருந்தனர்.நேற்று விசித்ரா கேமரா முன்பு பேசிய அந்த வார்த்தை.. விமர்சிக்கும் ரசிகர்கள்..  பிக் பாஸ் வைத்த செக் | Bigg Boss 7 Vishitra talking about Dinesh personal  life of the camera ...

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிலும் விசித்ரா மாயா அணியோடு சேர்ந்த பிறகு ரொம்பவே மாறிவிட்டார் என்று எதற்கெடுத்தாலும் தினேஷ் விசித்ராவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுபோல விசித்திரா தொட்டதற்கெல்லாம் தினேஷ் தன்னை குறை சொல்வதாக அடிக்கடி கேமரா முன்பு பதிவு செய்து கொண்டே இருக்கிறார்.

என்னை பற்றி நான் நடிக்கிறேன் என்று தினேஷ் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போ என்னுடைய பெயரும் வெளியே தப்பா போய்விடுமே… எல்லா மக்களும் என்னை அப்படி நினைத்து விடுவார்களே என்று அடிக்கடி விசித்திரா குழம்பிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் தன்னைப் பற்றி ஒருவர் நடிக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் அதை நம்பி விடுவார்கள் வெளியே தன்னை தவறாக நினைத்து விடுவார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும் விசித்திரா தினேஷ் உடைய பர்சனல் வாழ்க்கையை குறித்து அடிக்கடி விமர்சித்து பேசுகிறார்.

அதிலும் சில தினங்களுக்கு முன்பு இவருக்கெல்லாம் உண்மையான காதலே கிடைத்திருக்காது. அப்படியே கிடைத்திருந்தாலும் இவர் அந்த காதலை சரியாக பயன்படுத்தி இருக்க மாட்டார். புரிந்து கொள்ளவும் இவருக்கு தெரியாது. அன்பை எப்போதுமே இவர் நடிப்பு என்ற கோணத்தில் தான் பார்க்கிறார் என்று தினேஷ் மீது பெரிய குற்றச்சாட்டை வைத்திருந்தார்.நைட் ரூமுக்கு வா; அழைத்த டாப் நடிகர், கன்னத்தில் விழுந்த அறை - சினிமாவில்  விலகிய விசித்ரா! - தமிழ்நாடு

ஏற்கனவே தினேஷூம் அவருடைய மனைவி ரச்சிதாவும் பிரிந்து இருக்கின்றனர். அது குறித்து தினேஷ் பலமுறை பிக் பாஸ் வீட்டிற்குள் கண்ணீரோடு பேசி இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நாங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து விடலாம் என்ற ஒரு நம்பிக்கையில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் விசித்திரா இப்படி தினேஷ் பற்றி குற்றம் சுமத்துவதால் அவருடைய பர்சனல் வாழ்க்கை எவ்வளவு பாதிக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவில்லையா என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படியான நிலையில் நேற்று கேமரா முன்பு கோபமாக விசித்திரா பேசியிருக்கிறார். அதில் இங்கே இவருடன் ஹவுஸ் மேட் ஆக இருக்கவே முடியாது. சில மூஞ்சிகளை பார்த்தால் வெறுப்பா இருக்கு. எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த வெறுப்பு போகவே மாட்டேங்குது. இதுவெல்லாம் இருந்து என்ன பிரோஜனம்… வாழ்ந்து என்ன பிரயோஜனம். இப்படிப்பட்ட ஆளுடன் எப்படி குடும்பம் நடத்துவார்கள்? விட்டுட்டு ஓட வேண்டியதுதான்.

ஒரு மூன்று மாதம் இவர்களுடன் குடித்தனம் பண்ண முடியவில்லை. இவருடன் எல்லாம் எப்படி ஒருவர் குடித்தனம் நடத்துவார்? திரும்பி கிரும்பி வந்துடாதம்மா… ஒழுங்கா தனியா வாழ்க்கையை நடத்து. இவனுடலாம் வாழ்வதற்கு நீ தனியாவே இருந்து விடலாம் என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அது இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதுவரைக்கும் விசித்திராவை ஒரு அம்மா ரேஞ்சில் அதிகமான ரசிகர்கள் பார்த்திருந்த நிலையில் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களுடைய பர்சனல் வாழ்க்கையை சீரழிக்கும் விதமாக இப்படியா கருத்து கூறுவது? பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருவர் சில நாட்கள் மட்டும்தான் பார்த்து பழகி இருக்கிறார்கள். ஆனால் வெளியே அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால் இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்து தினேஷை ரச்சிதா பிரிந்தது சரி என்று சொல்லும் விதத்தில் இவர் பேசிக்கொண்டு இருப்பது தவறு என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் இவர் உண்மையில் சைக்காலஜி படித்து விட்டு தான் வந்திருக்கிறாரா? அல்லது வனிதா சொன்னது போல இவர் சர்டிபிகேட்டை மட்டும் வாங்கி வைத்திருக்கிறாரா? என்றும் கேள்வி கேட்கின்றனர்.

எது எப்படியோ பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அவர்களுக்கு தோனுவதை செய்வார்கள் வெளியே வந்த பிறகுதான் தங்கள் செய்தது சரியா தவறா என்று அவர்கள் விளக்கம் கொடுப்பார்கள். அதுபோல இப்போது வெளியே வந்து விசித்திரா என்ன சொல்ல இருக்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

இடுப்பு பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்கும் ஆஞ்சநேயாசனம்

Posted by - April 8, 2023 0
ஆஞ்சநேயாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர இருதய நலன் பாதுகாக்கப்படுவதோடு பிராண ஆற்றலையும் உடல் முழுவதும்…

ஓணம் ஸ்பெஷல்: கேரளா கூட்டு கறி

Posted by - August 28, 2023 0
கேரளாவின் மிகவும் பிரபலமான பண்டிகை தான் ஓணம். இந்த ஓணம் சத்யா விருந்தில் தலை வாழை இலை விரித்து, அதில் 26 வகையான உணவுகள் பரிமாறப்படும். அதில்…

நீங்கள் கடனில் சிக்கப்போகிறீர்கள் என்று உணர்த்தும் அறிகுறிகள் இவைதான்…

Posted by - April 13, 2023 0
கடன் பெருவதற்கு சிபில் ஸ்கோர் முக்கியமாக உள்ளது. வங்கிகளில் கடன் பெற்று திரும்பி செலுத்துபவர்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொண்டு வைத்திருப்பது நல்லது. வாங்கிய கடனை எல்லாம் சரியாகத்…

முடியப்போகும் குக் வித் கோமாளி, வந்தது பிக்பாஸ் 7வது சீசன் அப்டேட்- இந்த விஷயம் தெரியுமா?

Posted by - June 13, 2023 0
பிக்பாஸ் 7 TRPயின் நாயகனாக கடந்த சில வருடங்களில் இருந்து கலக்கி வருகிறது பிக்பாஸ். ஒவ்வொரு சீசனிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான TRP அதிகரித்துக் கொண்டே தான்…

இந்த பிரச்சனை இருப்பவர்கள் காளான் சாப்பிடுவதை தவிர்பது நல்லது : எப்போது ஆபத்தாக மாறும்..?

Posted by - December 28, 2022 0
காளான் என்பது பூஞ்சை வகையைச் சார்ந்த உணவுப் பொருளாகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிர்ம்பியுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். சைவ உணவு உண்பவர்களின் முதன்மையான உணவுத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *