பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பாடம் கற்பாரா விஜய்?

187 0

குஜராத் முதல்வராக இருந்த மோடியை நாட்டின் பிரதமராக உயர்த்த வியூகம் வகுத்தவர், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் வெற்றிக்கு வியூகம் வகுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்.

அவருக்கு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறது பிஹார் தேர்தல் முடிவு. சொந்த மாநிலமான பிஹாரில் மிகுந்த நம்பிக்கையுடன் தனது ஜன் சுராஜ் கட்சி சார்பில் 238 தொகுதிகளில் வேட்பாளர்களை இறக்கினார். 150 இடங்களில் வெற்றி நிச்சயம் என்றார். ஆனால், போட்டியிட்ட அனைத்திலும் தோல்வி. டெபாசிட்கூட 2 தொகுதிகளில் மட்டும்தான் கிடைத்தது.ஊருக்கெல்லாம் ஆலோசனை சொன்னவர் சறுக்கியது ஏன்? பிரசாந்த் கிஷோர் ஏற்கெனவே வேலை செய்த அத்தனை தலைவர்களுக்கும் அவர்களது கட்சி என்கிற கட்டமைப்பு மிக வலுவாக இருந்தது. அந்த வலுவான கட்டமைப்பில் சில உத்திகளை புகுத்தி, பல வியூகங்களை வகுத்து அதை மக்கள் மத்தியில் எடுபடச் செய்து அதன்மூலம் அரசியலில் ஜொலிக்கச் செய்ய அவரால் முடிந்தது. எனவே, வியூகம் வகுப்பதைவிட கட்சி கட்டமைப்புதான் முக்கியம் என்பதை தெளிவாக உணர்த்தியிருக்கிறது இந்த தேர்தல். தமிழகத்தில் இது தவெகவுக்கான செய்தி.கட்சித் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என்ற இருவரை மையப்படுத்தியே செயல்பட்டு வரும் தவெகவுக்கு அடிப்படை கட்டமைப்பு மற்ற பிரதான கட்சிகள் அளவுக்கு இல்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அதனால், கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தாமல் வெறும் வியூகத்தை மட்டுமே நம்பி களமிறங்குவது வெற்றியை தேடித் தராது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.ரசிகர்களுக்கான தலைவர் என்பதைக் கடந்து, பனையூரைவிட்டு வெளியே வந்து முழுநேர அரசியல்வாதியாக விஜய் மாறினால் மட்டுமே பிஹாரில் பிரசாந்த் கிஷோருக்கு ஏற்பட்டதுபோன்ற நிலைமையை தவிர்க்கலாம் என்பதும் அவர்களது கருத்தாக உள்ளது.

Related Post

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – ரூ.5, 650 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Posted by - March 11, 2026 0
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, 5 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி…

”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு

Posted by - July 28, 2025 0
Seeman On Vijay: தவெக தலைவர் விஜய்க்கு எதற்கு X,Y பிரிவு பாதுகாப்பு என, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். Seeman On Vijay: சொந்த…

ஜனநாயகன் பிரச்னை – காங்கிரஸ் அட்டாக்

Posted by - January 8, 2026 0
ஆர்.எஸ்.எஸ்., படங்கள் மட்டும் கலாச்சார படங்கள் என போற்றப்படுவது ஏன்? என விஜயின் ஜனநாயகன் பட விவகாரத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. தணிக்கை குழுவும் பாஜகவால் ஆயுதமாக…

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

Posted by - April 15, 2026 0
திமுகவின் வார் ரூம் எனும் கட்டளை மையத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் யதார்த்தமான கள நிலவரத்தை கண்காணித்து,…

ஆரம்பமே அதிர்ச்சி.. விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. தேர்தல் பரப்புரை நடக்குமா?

Posted by - March 31, 2026 0
விஜய் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். விஜயை காணும் பொருட்டு வழியெங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொளத்தூரில் திரண்ட மக்கள் கூட்டம் அச்சத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *